பாசுமதி பிரியாணி இனி கிடைக்காதா? விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா?
சென்னை: பாசுமதி அரிசி மீதான ஏற்றுமதி விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. டன்னுக்கு ரூ.1 ட்சத்து 657 ஏற்றுமதி விலையாக இருந்த நிலையில் அது முற்றிலுமாக நீக்கப்பட்டள்ளது. இதனால் பாசுமதி அரிசி ஏற்றுமதி என்பது அதிகரிக்க உள்ளது. பாசுமதி அரிசி விவசாயிகள் லாபம் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பாசுமதி பிரியாணிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரியாணி.. அனைவருக்கும் பிரியமான உணவுகளில் ஒன்று. அதிலும் பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வெரைட்டி வெரைட்டியாக பல புதிய டிஷ்கள் வந்தாலும் கூட இன்று வரை பிரியாணி என்றால் அனைவரின் நாக்கில் எச்சில் உறும் என்பது தான் பிரியாணிக்கு தனி மவுசாக உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் பிரியாணி தனது சுவையால் கட்டிப்போட்டுள்ளது. இதனால் தான் பெரிய பெரிய ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை பிரியாணி என்பது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சமீபகாலமாக நம் நாட்டில் பாசுமதி அரிசிக்கான தேவை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தேவை அதிகரிப்பால் பாசுமதி அரிசின் விலையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தற்போது சுப நிகழ்ச்சிகளில் பிரியாணி சமைப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பாசுமதி அரிசியின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பாசுமதி அரிசிக்கான விலை என்பது 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதேபோல் நம் நாட்டில் இருந்து பாசுமதி ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் பாசுமதி அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2022-23ம் ஆண்டில் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.40,263 கோடி) மதிப்பிலான பாசுமதி அரிசி என்பது ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்தியா சார்பில் 5.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு ரூ.49,490 கோடி) மதிப்பிலான பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபரில் பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை(Minimum Export Price) என்பது டன்னுக்கு ரூ.79,687 ஆக இருந்தது. அந்த சமயத்தில் வெள்ளை இல்லா பாசுமதி அரிசிகள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனை தடுக்க ஒரு டன் பாசுமதி அரிசிக்காக ஏற்றுமதி விலை என்பது ரூ.1 லட்சத்து 657 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும்போது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை வரியாக செலுத்த வேண்டும். அந்த வகையில் ஒரு டன் (1,000 கிலோ) பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும்போது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக ரூ.1 லட்சத்து 657 இருந்தது. தற்போது அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி என்பது அதிகரிக்கும். இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் என்பது கிடைக்கும். தற்போது ஹரியானாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கிருந்து அதிகளவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி உள்ள நிலையில் அங்கு வசிக்கும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில் பாஸ்மதி அரசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் பாசுமதி அரிசிக்கான அனைத்து ஏற்றுமதி ஒப்பந்தங்களையும் உன்னிப்பாக கண்காணித்து இந்த முடிவை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க ஏபிஇடிஏ எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பாசுமதி பிரியாணிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிக லாபத்தை மனதில் வைத்து வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்வார்கள். இதனால் நம் நாட்டில் பாசுமதி அரிசிக்கு கிராக்கி ஏற்படும். இதனால் உள்நாட்டிலும் பாசுமதி அரிசி விலை உயர வாய்ப்புள்ளதோடு, பாசுமதி அரிசி எளிதாக கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். இதனால் தான் வரும் நாட்களில் பாசுமதி பிரியாணி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications