Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் வீட்டை பாருங்க.. அமித் ஷாவிற்காக ரெடியாகும் பங்களா! இங்கேயே தங்கி காய் நகர்த்த முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை குறிவைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன் தமிழக வியூகம் தொடர்பாக, வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அமித் ஷா தங்குவதற்கு வசதியாக அவர் இந்த குடியிருப்பை தேர்வு செய்வார் என்கிறார்கள். கிண்டி, அடையார் சுற்றுவட்டாரத்தில் அவருக்கான தற்காலிக குடியிருப்பு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தேர்வு செய்யும் தேடுதல் வேட்டை சில பாஜக தலைகள் வழியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வரவுள்ளார். அவர் சென்னை - வேலூர் செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, கூட்டணி விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரமாக இருக்கும் அமித் ஷா

சமீபத்தில் அகமதாபாத் மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வென்றதைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வலுவான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 2014 மக்களவை முதல் 2025 வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. தொடர் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது என்றார்.

மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் தயாராக இருக்க வேண்டும். பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் நேரம் இது. பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதியுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்குத் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை என்றார். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக-வைக் குறிப்பிட்டு, "தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் அவர்கள் அடியோடு துடைத்தெறியப்படுவார்கள்," என உறுதிபடக் கூறினார்.

அமித் ஷா தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி எட்டு மாதங்களாகியும் வேறு எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவில்லை. இதற்கிடையே, அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Union Minister Amit Shah to stay in Tamil Nadu and do some politics ahead of elections

இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பேச்சு

அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இணையலாம் என்பதை பற்றி தானே முடிவு எடுப்பேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பாஜக நயினாரிடம் சில விஷயங்களை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக கூட்டணி பற்றி ஆலோசனைகளை இவர் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரன்

எடப்பாடி நயினாரிடம் பேசுகையில், கூட்டணியில் யார் இணையலாம் என்பதை அதிமுகவே முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் இருந்தால் போதும். வேறு கட்சிகளை கொண்டு வர பாஜக நினைக்க வேண்டும். அதிமுகவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை செய்யும்.

எந்தெந்த கட்சி உள்ளே வரலாம் என்பதை பாஜக முடிவு செய்ய கூடாது. அதிமுகவே முடிவு செய்யும். வேண்டுமென்றால் இடஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளில் அதிமுக உடன் பாஜக இணையலாம். ஆனால் மற்றபடி கூட்டணிக்கு யார் வரலாம் என்று பாஜக முடிவு செய்ய கூடாது.. இடஒதுக்கீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரனிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி கேட்டது என்ன?

அமமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைக்க எடப்பாடி எதிர்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரவும் விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தவெக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித் ஷாவை சந்திப்பார். முன்னதாக, அமித் ஷா கடந்த இரு வாரங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது, டிசம்பர் 15 அன்று வரும்போது, அவர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணியின் விரிவாக்கம் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.

இந்த வருகையின்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் அறிவிப்பு வெளியாகலாம். ஏற்கனவே, அ.ம.மு.க., பா.ம.க. மற்றும் சில கட்சிகள் தி.மு.க.வுக்கு எதிரான கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+