தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்.. அண்ணாமலை மாற்றமா? சென்னை வரும் கிஷன் ரெட்டி.. பரபரக்கும் சீனியர்கள்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல் வந்துள்ளது. 2 நாட்கள் சென்னையில் தங்கவுள்ள கிஷன் ரெட்டி, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைமை சார்பாக ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை உட்கட்சி தேர்தலை பாஜக நடத்தும். அதற்கேற்ப மாநில தலைவர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்ய பாஜக தலைமை தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளித்த பின், அவரது இடத்திற்கு இளம் நிர்வாகியான அண்ணாமலை கொண்டு வரப்பட்டார். அவரது தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து, புதிய கூட்டணியோடு பாஜக களம் இறங்கியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்றாலும், வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை வரும் கிஷன் ரெட்டி 2 நாட்கள் சென்னையில் இருந்து பல்வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அதன்பின் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான அறிக்கையை கிஷன் ரெட்டி கட்சித் தலைமையிடம் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதன்பின் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேசிய தலைமை அறிவிக்கும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழலில் பாஜக தலைமையில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தல் பணிகள் தொடங்கி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட ஏராளமான பணிகளை மாநில தலைவர் செய்ய வேண்டும்.
இதனிடையே மதுரையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை மீண்டும் நியமிக்கப்பட்டதாக சில நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாஜக வட்டாரத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications