கூகுள் பே, போன்பே யூசர்களுக்கு இன்று முதல் குட் நியூஸ்! UPI தினசரி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு!
சென்னை: கூகுள் பே, போன் பே, யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. யுபிஐ மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு யுபிஐ பரிவர்த்தனை என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாக மாறிவிட்டது. தற்போது நாடு முழுவதும் சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.24.85 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது ரூ.20.60 லட்சம் கோடியாக இருந்தது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1,490 கோடியில் இருந்து 34 சதவீதம் உயர்ந்து 2,001 கோடியாக உள்ளது. சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.80,177 கோடியாகவும், எண்ணிக்கை 64.5 கோடியாகவும் உள்ளது.
இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை, NPCI என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கட்டண கழகம் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இன்று முதல் தனிநபர்கள், வணிகம் சார்ந்து மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, பங்கு சந்தை மூலதன சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு 6 லட்சம் ரூபாயாகவும், கடன் மற்றும் மாதத் தவணைகளை செலுத்துவதற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐபிஓ (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications