அமெரிக்கா போறீங்களா? ஆக. 1 முதல் விசா விதிகளில் மாற்றம்! இதை தெரிஞ்சுக்கோங்க
சென்னை: இந்தியாவில் அமெரிக்க தூதரகம் விசா விதிகளில் மாற்றம் செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் ஆக.1 முதல் அமலாகின்றன. எனவே அமெரிக்கா போக விரும்பும் இந்தியர்கள் இது குறித்து தெரிந்துக்கொள்ளவும்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், விசா விண்ணப்பதாரர்களுக்கான பாஸ்போர்ட்டுகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கும் முறையை நிறுத்தியுள்ளது.

இனிமேல், விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை தூதரக்திலோ அல்லது துணை தூதரக அலுவலகத்தில் நேரில் சென்று பெற வேண்டும். அல்லது, ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ₹1,200 கட்டணம் செலுத்தி, வீடு, அலுவலக முகவரிக்கு பாஸ்போர்ட்டுகளை நேரடியாகப் பெறுவதற்கான சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சேவை USTravelDocs மூலம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட்டுகளை, பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் நேரில் பெறும்போது, இரு பெற்றோர்களும் கையொப்பமிட்ட அசல் சம்மதக் கடிதத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பாதுகாப்பை வலுப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த மாற்றங்களுக்கு ஏற்றபடி விசா நடைமுறையில் முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு விசா கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் விசாவுக்கான விதிகளையும் டைட் செய்திருப்பது இந்தியர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இட்ஸ் வெரி ராங் ப்ரோ என பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications