Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே மிக வறுமையான நாடாக.. மாறுகிறது அமெரிக்கா.. எச்சரித்த பிரபல வல்லுநர்.. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க தொழில்முனைவோரும், வணிக வல்லுனரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி, அமெரிக்கா இப்போது உலகின் ஏழ்மையான நாடாக இருக்கப் போகிறது.. அதற்கான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று எச்சரித்து உள்ளார்.

ரிச் டாட் புவர் டாட் புத்தகத்திற்காக உலகம் முழுக்க அறியப்படும் கியோசாகி, க்ரோத் உச்சிமாநாடு இந்தியா 2023க்காக இந்தியாவில் இருந்தபோது ஒரு பாட்காஸ்டில் பேட்டியளித்தார். அவரின் இந்த பேட்டி தற்போது அமெரிக்காவின் வர்த்தக போருக்கு இடையே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

gold rate Bitcoin

அவர் தனது பேச்சில், அமெரிக்கா மிக மோசமான நிலையில் உள்ளது. நான் எப்போதும் இந்தியா வந்தால் சேரிகளுக்குச் செல்வேன். எனவே, இந்த முறை, மும்பையின் சேரிகளுக்குச் சென்றேன். பல இடங்கள் இங்கே மாறிவிட்டன. ஆனால், அமெரிக்காவை மக்கள் பார்த்ததில்லை. இன்று, அமெரிக்கா முழுவதும் சேரிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. இந்தியாவை விட மோசமான நிலை அமெரிக்காவில் உள்ளது.

மும்பையில் சேரிகள் உள்ளது போல அமெரிக்கா முழுவதும் சேரிகள் பரவுகின்றன. சான் பிரான்சிஸ்கோ அமெரிக்காவின் மிக அழகான நகரமாக இருந்தது என்பது என் கருத்து... நான் சான் பிரான்சிஸ்கோவில் வேலை செய்தேன். இப்போது, ​​​​நீங்கள் தெருக்களில் நடக்க முடியாது. அந்த அளவிற்கு மோசமாகிவிட்டது. ஏனென்றால் அது மும்பையின் சேரிகளை போல மாறிவிட்டது. மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

அமெரிக்காவின் டாலர் மதிப்பு மோசமாகி வருகிறது. சீனாவிடம் நிறைய தங்கம் உள்ளது. அதனால் அவர்கள் பணம் பிரிண்ட் செய்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அமெரிக்காவில் தங்கம் இருந்தாலும் அவர்கள் அதைவிட அதிகமாக பணம் பிரிண்ட் செய்கின்றனர். இது பணவீக்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது.

இந்தியாவில் உள்ள அளவிற்கு அதைவிட மோசமாக அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு டாய்லட் பேப்பருக்கு இருக்கும் மதிப்புதான் டாலருக்கும் இருக்க போகிறது. ஆனால் இதை யாரும் துணிச்சலாக பேசமாட்டார்கள் . அமெரிக்காவில் வீடற்ற மக்கள் பலர் உள்ளனர். அவர்களில் சிலர் போதைப்பொருளில் சிக்கி உள்ளனர், ஆனால் பலர் வீடு வாங்க முடியாது சூழலில் உள்ளனர். அந்த அளவிற்கு பொருளாதாரம் அங்கே மோசமாக உள்ளது. அமெரிக்காவின் கேப்பிடலிஸ்ட் பொருளாதாரம் உடைய தொடங்கி உள்ளது.

அமெரிக்கா இப்போது உலகின் ஏழ்மையான நாடாக இருக்கப் போகிறது.. அதற்கான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று எச்சரித்து உள்ளார்.

என்ன கூறினார்

அதோடு சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி சமீபத்தில் உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.

2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.

இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமா தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் விரைவில் நடக்கும், என்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம் என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+