மழைக்காலம்.. மின் சாதனங்களில் கவனம்.. செல்போனை இப்படி பயன்படுத்தவே கூடாது.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழி முறைகள் குறித்த விளக்கத்தை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே வரும் 5 ஆம் தேதி முற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

use-electrical-appliances-with-caution-during-monsoons-details-instruction-given-by-tneb-officials

புயல் தமிழ்நட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி செல்வதால் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழி முறைகள் குறித்த விளக்கத்தை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ளார். இது பற்றியவிவரங்களை பார்க்கலாம்.

ஆஃப் செய்த பிறகே:மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டி வைக்கக் கூடாது. மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யவேண்டாம். ஈரமான நிலையில் மின்சாதனங்களை இயக்க கூடாது.

பிளக் சுவிட்சை ஆஃப் செய்த பிறகே மின் விசிறி, அயர்ன் பாக்ஸ் செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் ஆகியவற்றின் மீது தண்ணீர், மழைநீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடி விழும்போது: இடி அல்லது மின்னலின் ஆகியவற்றின் போது கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையலாம்.. திறந்த வெளியிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்தங்களின் கீழோ, நீச்சல் குளத்தின் அருகிலோ தஞ்சம் அடையவேண்டாம். டி.வி. மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க கூடாது. கீழே விழுந்த மின்கம்பியில் இருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்தில் நிற்க வேண்டும். மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்றால் மின்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+