குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை... ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்தே அதிபர் பிடன் -வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

Vairamuthu Congratulate to Usa new president Joe Biden and Vp Kamala Harris

எனக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்தே நான் அதிபராக பணியாற்றுவேன் என ஜோ பிடன் கூறியிருப்பது, அவரது பெருந்தன்மைக்கும், மகத்துவத்திற்குமான சான்று என புகழாரம் சூட்டியுள்ளார்.

மழையை வெறுத்து குடைபிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிவது போல் அமெரிக்க புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் கூற்று அமைந்துள்ளதாக அவர் உவமைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கும் தனது இதயப்பூர்வமான வாழ்த்தை உரிதாக்கி கொள்வதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

Vairamuthu Congratulate to Usa new president Joe Biden and Vp Kamala Harris

இதனிடையே வைரமுத்து தனது ட்வீட்டர் பகத்தில் ஆங்கிலத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச்செய்தியை சுட்டிக்காட்டிய அவரது ரசிகர்கள், தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் வார்த்தை விளையாட்டு நடத்துவதாகவும், ஜோ பிடனின் உரையை மழையுடன் ஒப்பிட்டதை பாராட்டியும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+