தேனும் தினைமாவும்.. என் பேராசை நிறைவேறுமா?.. வைரமுத்து ட்வீட்
சென்னை: பீட்சா பர்கர் சாப்பிடுவோருக்கு தேனும் தினைமாவும் தின்னத் தர வேண்டும் என்கிற என் பேராசை நிறைவேறுமா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டில், நாட்படு தேறல்
விசையுறு பந்தினைப்போல்
என்னை வினைப்படச் செய்கிறது
நாளை இளைஞர்க்கு
நல்ல தமிழ் கடத்த வேண்டும்
பீஸா பர்கர் தலைமுறைக்குத்
தேனும் தினைமாவும்
தின்னத்தர வேண்டும்
என் பேராசை நிறைவேறுமா?
நேற்றும் படப்பிடிப்பு
உடன்
இயக்குநர் விக்னேஷ்வரன்
ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்
என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் சிற்றாசை கண்டிப்பாக நிறைவேறும் என பலர் ட்வீட் போட்டுள்ளனர். அதில் ஒருவர் இது பேராசையல்ல கவி மகானே
நீங்கள்
தமிழ்த் தவம் செய்கிறீர்கள்
பொருள் ஈட்ட அல்ல
சமூகம் பற்றி கவலைப்பட்டு போராடிய அய்யா அண்ணா கலைஞர் போல
உங்கள் தமிழால்
சமூகம் மேன்மையுற உழைக்கிறீர்கள்
நேற்றும்
இன்றும்
நாளையும்
செய்கிறீர்கள்
செய்வீர்கள்
வாழ்க எம்மானே
நலமுடன் தமிழுடன்
என்கிறார் இந்த வலைஞர். அது போல் இன்னொருவர்
ஆயிரம் தான் பீசா பர்கர் சாப்பிட்டாலும், தேனும் தினை மாவும் என்றும் ஒரு அலாதிச் சுவை என்பதை அறிவோம். இரண்டாம் பருவத்து தேறலின் சொற்ச் சுவை, இசைச் சுவை இவையனைத்தையும் ஒன்றிணைத்து உண்ண காத்திருக்கிறோம் ஐயா என்கிறார் இந்த வலைஞர்.

அது போல் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,
ஏசுநாதர் தோன்றியநாள்
பேரன்பின் பிறந்தநாள்;
தியாகத்தின் திருநாள்
அன்பு செலுத்துங்கள்;
செலுத்தப்படுவீர்கள்
முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கட்டும்
உலகக்
கிறித்துவ சமூகத்துக்குக்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications