எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்! ஆனால் ஒரு கண்டிஷன்.. வைத்திலிங்கம் பரபரப்பு
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தயார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வருவாரா மாட்டாரா என்றிருந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்னரே அவர் கலந்து கொண்டார்.
2 ஆப்ஷன்தான்.. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்தே தூக்க எடப்பாடி முடிவு? கவனிச்சீங்களா? திரை தீ பிடிக்கும்!
எனினும் அவரை தொண்டர்கள் விழா மேடையை நெருங்க விடவில்லை. அவரை துரோகி என்றும் மேலும் அவதூறான வார்த்தைகளாலும் விமர்சித்தனர். இதையடுத்து ஓபிஎஸ் தனி அறையில் காத்திருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் ஓபிஎஸ்ஸும் மேடைக்கு வந்தார்.

10 நாட்கள்
சுமார் 10 நாட்கள் கழித்து இருவரும் ஒன்றாக சந்தித்து கொண்டனர். எனினும் ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகவும் மோசமான அளவுக்கு அவமரியாதை செய்தனர. இதையடுத்து வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் கூடும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

வெளிநடப்பு
இது ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தனர். அப்போது இந்த கூட்டம் செல்லாது என கூறிவிட்டே சென்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

பதவி வெறி
அப்போது அவர் கூறுகையில் பதவி வெறியில் நடந்தது பொதுக் குழுவே அல்ல. இன்று நடந்தது அரை மணி நேரத்தில் நடந்த ஓரங்க நாடகம். பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அதிமுகவின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்.

பொதுக் குழு
இந்த பொதுக் குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம். அதிமுக பொதுக் குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். எனவே அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செல்லாது.

பேச்சுவார்த்தைக்கு தயார்
அது போல் பொதுக் குழுவை கூட்டுவதற்கு அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக் குழுவை அவைத் தலைவர் கூட்ட முடியாது. கட்சியின் நலன் கருதி ஓபிஎஸ் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் கூட்டுத் தலைமை பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கூட்டுத தலைமைதான் கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்தாகும் என்றார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் இந்த கருத்து குறித்து அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்தால் பேச தயார் என தெரிவித்துள்ளார்.