Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நொறுங்கிடுச்சே".. வந்தே பாரத் ரயில்.. அடுத்த பலத்த அடி.. ரயில்வே துறையின் மேஜர் அறிவிப்பு.. 5 வருடமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு கல்வீச்சு சம்பவம் நடந்துள்ள நிலையில், வன்முறையாளர்களை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன், எச்சரிக்கை அறிவிப்பும் ஒன்றும் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

vande bharat train incident and stone pelting incident on vande bharat train near Chennai

எக்ஸ்பிரஸ் ரயில்களை போல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார். முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

vande bharat train incident and stone pelting incident on vande bharat train near Chennai

பரோட்டாவில் புழு: ஆனால் வந்தே பாரத் ரெயில் போக்குவரத்து துவங்கியதில் இருந்தே ஏகப்பட்ட புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. ரயில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல், பரோட்டாவில் புழுக்கள் போன்ற புகார்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இதில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பரோட்டாவில் புழு நெளிந்தது அதுவும், வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பியது.. இது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மற்றொருபக்கம், ரயிலின்மீது கல்வீச்ச சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன.. இதுவரை 15 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அவற்றில் சில ரயில்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. கிட்டத்தட்ட 6, 7 முறை இப்படியான கல்வீசி தாக்குதலும், கண்ணாடி நொறுங்குதலும் நடந்தபடியே உள்ளன.. கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு 2 நாட்களுக்கு முன்பு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கல்வீச்சு சம்பவம் நடந்தது..

காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே, மகேந்திரவாடி - அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரயில் பெட்டி மீது கற்களை வீசியுள்ளனர். அதில் C6 பெட்டியில் 75 மற்றும் 76 ஆகிய இருக்கைகளுக்கு அருகில் இருந்த கண்ணாடி சேதம் அடைந்தது.

நொறுங்கிய கண்ணாடிகள்: இதைக்கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்... இதுபற்றி வந்தே உடனடியாக பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சென்னை ரயில்வே போக்குவரத்து கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை ரயில்வே போலீசாரும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. சேதமடைந்த கண்ணாடிகளையும் சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

அவசர உதவி எண்: இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஒருவர் சொல்லும்போது, "ரயில் மீது கற்களை வீசுவது என்பது ரயில்வே சட்டத்தில் 153 மற்றும் 154 பிரிவுகளின்கீழ் குற்றமாகும். இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்தால், கட்டணமில்லா உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்று கூறியிருந்தார்.. இப்போது இன்னொரு சம்பவமும் நேற்று நடந்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது, கொரட்டூர் - வில்லிவாக்கம் இடையே, சிலர் கற்களை வீசி உள்ளனர். இதனால், ரயிலில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது, ரயில் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

பிக் வார்னிங்: அதில், ரயில்வே பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது அனைவருடைய கடமை. ரயில்கள் மீது கற்களை வீசுவது, ரயில்வே சட்டத்தில், 153, 154வது பிரிவுகளின் கீழ் கிரிமினல் குற்றம். சட்டவிரோத செயலை செய்தல், ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் பயணியரின் பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்தினால், ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை, சிறைத்தண்டனை விதிக்கப்படும். கற்கள் வீசியவர்களை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் என்று வார்னிங் தந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+