தமிழகத்தில் வந்தே மெட்ரோ ரயில்கள் ஓடப்போகும் ரூட் இதுதானா? ரொம்பவே முக்கியமான இடமாச்சே.. செம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில்களை போலவே எல்லா வசதிகளையும் கொண்ட வந்தே மெட்ரோ ரயில்கள் குறுகிய தொலைவு கொண்ட நகரங்களை இணைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த ரூட்களில் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவலை ரயில்வே அதிகாரி வெளியிட்டுள்ளார். சென்னை - குதூர் (ஆந்திரா), சென்னை - விழுப்புரம், சென்னை- ஜோலார்பேட்டை ஆகிய 3 ரூட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் வந்தே பாரத் சொகுசு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் வந்தே பாரத் ரயில்களில் உள்ள சொகுசு வசதிகள்தான். இந்த ரயில்களில் முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல வசதிகள் உள்ளன.

vande metro rail railway

வந்தே மெட்ரோ ரயில்

தமிழகத்திலும் சென்னை - பெங்களூர், சென்னை - நெல்லை என பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களை போல குறுகிய தொலைவு கொண்ட நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்தது. தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில் என்பது நீண்ட தொலைவுக்கு இயங்கி வருகிறது. ஆனால் வந்தே மெட்ரோ ரயில் அருகருகே இருக்கும் இரு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்த ரூட்களில் இயக்கப்படுகிறது?

அதாவது வந்தே மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே இயங்கும். இந்த வந்தே மெட்ரோ ரயில்களில் வந்தே பாரத் ரயிலுக்கு நிகரான வசதிகள் இருக்கும். இதனால், வந்தே மெட்ரோ ரயில்கள் மீது பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் எந்த ரூட்களில் எல்லாம் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வந்தே மெட்ரோ ரயில்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- சென்னை - குதூர் (ஆந்திரா), சென்னை - விழுப்புரம், சென்னை- ஜோலார்பேட்டை ஆகிய மூன்று ரூட்களை அடையாளம் கண்டுள்ளோம். இந்த வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த ரூட்டில் வந்தே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

3 இல் எந்த வழித்தடம்

இவற்றில் எந்த ரூட்டில் வந்தே மெட்ரோவை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்ற ரீதியில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த கவுசல் கிஷோர், "தற்போது சாத்தியக்கூறு ஆய்வு மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே வழித்தடம் என்பது பெட்டிகள் வந்த பிறகே உறுதி செய்யப்படும்" என்றார். சென்னை பீச் - எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடமும் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறினார்.

வந்தே மெட்ரோ ரயிலில் உள்ள சிறப்புகள்

வந்தே மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை 12 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படும். இந்த ரயிலில் பயணிகளை கவரும் வகையில் நவீன டிசைன்கள் உள்ளன. சொகுசு இருக்கைகள், சிசிடிவி கேமரா, அதி நவீன டாய்லட்கள், ஆட்டோமெடிக் டோர் ஆகிய வசதிகள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமரும் வகையில் சீட் ஒதுக்கப்பட்டு இருக்கும். 200 பேர் நின்று கொண்டு செல்ல முடியும். குறுகிய தொலைவு மட்டுமே இயக்கப்படும் என்பதால், அதிக பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் குஜராத்தின் புஜ் முதல் அகமதாபாத் வரை இயக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+