“நஞ்சை கக்கும் மோடி.. சத்தீஸ்கரில் சாதி பேச்சு!” 33% மகளிர் இடஒதுக்கீடு 15 வருசமா? வன்னியரசு சுளீர்
சென்னை: சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு 2039 ஆம் ஆண்டு வரை தள்ளிப்போகலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்து உள்ளார்.
33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றியதை பெருமை பட்டுக்கொள்கிறது பாஜகவும் மோடியும். ஆனால், இந்த மசோதாவை செயல்படுத்தும் முன் 1. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 2.தொகுதி வரையறை செய்ய வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டு தான் தொடங்க முடியும். அப்படி தொடங்கினால், 2028 ல் தான் கணக்கெடுப்பு முடியும். அதன் பின்னர் 543 மக்களவை தொகுதிகளையும் மறுவரையறை செய்ய வேண்டும். இந்த வரையறையில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய இரு ஆண்டுகள் ஆகும். அதாவது, 2030 ஆம் ஆண்டு தான் பெண்களுக்கான தொகுதிகளை கண்டறிய முடியும்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலோ, 2029 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலோ பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது. 2034 ஆம் ஆண்டில் தான் இது நடைமுறைக்கு வரும். அதுவும் சரியாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை குறித்த ஆண்டில் தொடங்கினால் தான், 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.
அல்லது 2039 ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு. உடனடியாக பயன் பெறாத இட ஒதுக்கீட்டு சட்டத்தை இப்போது கொண்டு வருவதற்கு தேர்தல் லாபத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்? இச்சூழலில், இந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பெண்களுக்கு ஓபிசி பெண்களுக்கு தலித் மற்றும் பழங்குடி பெண்களுக்கு ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழுவில் பாஜக அல்லாத எல்லா கட்சிகளுமே கருத்துகளை சொல்லியுள்ளன.
இதே வரையறையில் மாநிலங்களவையிலும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது சமூகநீதி கோரிக்கையாகும். உண்மை இப்படி இருக்க,
இந்திய தலைமை அமைச்சர் மோடி, நேற்று சத்தீஸ்கரில் நடைப்பெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், இந்த சமூகநீதி கோரிக்கைகளை திசைதிருப்பும் வகையில், "சாதி ரீதியாக பெண்களை பிரிக்கிறது காங்கிரஸ்" என நஞ்சை கக்கியுள்ளார் பிரதமர்.
ஏற்கனவே, நீரவ் மோடி என பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என திரு.ராகுல் கேட்ட கேள்வியை,
'மோடி சாதி'யை இழிவுபடுத்தியதாக திசை திருப்பிய நயவஞ்சகத்தை தான் மோடி இப்போது இட ஒதுக்கீட்டிலும் பின் பற்றுகிறார். பாஜகவின் இட ஒதுக்கீட்டு நாடகத்தை மக்களிடையே அம்பலப்படுத்துவது ஒன்றே
மக்களை பாதுகாக்க முடியும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications