கலைஞரை தெலுங்கன்னு சொன்ன சீமான்.. திமுகவுக்கு வெட்கமில்லை.. நாதகவுக்கு வெட்கமில்லை! வன்னியரசு சுளீர்
சென்னை: தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்ததை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கட்டணம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் சீமானுக்கு ஆதரவாக திமுக பேசுவதா? என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் வன்னியரசு, திமுகவுக்கும் வெட்கமில்லை.. நாதகவுக்கும் வெட்கமில்லை என விமர்சித்துள்ளார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, விஜய்யின் கான்வாயை தடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் செய்யப்பட்ட கார்த்திகாவின் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கார்த்திகாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்ட சீமான், தன்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கலைஞரையும் பெரியாரையும் மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளரும், அமைச்சருமான வன்னியரசு திமுகவுக்கும் வெட்கமில்லை.. நாதகவுக்கும் வெட்கமில்லை என கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்," ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு @SeemanOfficial அவர்கள்.இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.திராவிடக்கோட்பாட்டையும்சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.அதுமட்டுமல்ல,கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.இப்படி கோட்பாட்டு வழியிலும்தனிநபர் தாக்குதலிலும்ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம்.விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;நாதகவுக்கும் வெட்கமில்லை.- வன்னி அரசுசமூகநீதித்துறை அமைச்சர்துணைப்பொதுச்செயலாளர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 22.10.2026
— வன்னி அரசு (@VanniTamizhVCK) October 22, 2026
அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான். திராவிடக்கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.
அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான். இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை." எனக் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications
