முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் நாளை சந்திப்பு.. பரபரப்பு பேச்சுக்கு நடுவே திடீர் மீட்டிங்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினை நாளை தொல் திருமாவளவன் சந்திக்க உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டிலும் வெற்றி பெற்றது. திருமாவளவன் எம்பியாக உள்ளார். தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பாஜக, பாமக தவிர இதர கட்சிகள் வரலாம் என பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதும், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே 'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று திருமாவளவன் பேசிய வீடியோ அவரது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் திருமாவளவன், ‛‛தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ, 2016ல் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம்.
இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது" எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளானது. இதையடுத்து சற்று நேரத்தில் வீடியோ டெலிட் ஆனது. பிறகு மீண்டும் பதிவிடப்பட்டு அதுவும் டெலிட் செய்யப்ப்பட்டது.
இது குறித்து திருமாவளவனிடம் கேட்ட போது அட்மினிடம் தான் கேக்க வேண்டும்.. என்று கூறியிருந்தார். பிறகு நேற்று மாலை திருமாவளவன் பேசிய முழு வீடியோவும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் துணிந்து விட்டாரா?... அதிமுக அல்லது விஜயின் தவெக கட்சிகளுடன் இணைய ஆயத்தமாகி வருகிறாரா? என்றெல்லாம் கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே முதல்வர் மு.க ஸ்டாலினை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நாளை சந்தித்து பேசுகிறார். நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. சமீபத்திய பரபரப்புக்கு இடையே தொல் திருமாவளவன் முதல்வரை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications