சேரி இழிவா..? குஷ்பு முன்னோரே ஜாதியால் பாதிக்கப்பட்டு இஸ்லாமுக்கு போனவர்கள்தானே- விசிக பாவலன் கேள்வி
சென்னை: சேரி என்றால் அன்புனு சொல்லி சப்பை கட்டு கட்டாம நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன் கோரிக்கை விடுத்து
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சேரி என்பது உயர்திணை. மகான் புத்தர் போதித்த சங்கம் என்பது சேர்ந்து வாழ்தல் என்பதாகும்.சேர்ந்து வாழ்ந்த பகுதியே சேரி என்றழைக்கப் படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான பழக்க வழக்கங்களை அடைகாக்கும் பகுதியாகவே இன்றைக்கும் கிராமப்புற சேரி பகுதியே திகழ்கின்றன.

சோறை சோறு என்றழைக்கும் பண்பாட்டு அடையாளமாக இன்றைக்கும் சேரிகள் திகழ்கின்றன.
இதுவெல்லாம் அறியாத நடிகை குஷ்பு கற்பனை மயக்கத்தில் இருக்கிறார். அவரது முன்னோர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இசுலாத்தை தழுவியவர்கள் என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். சேரி மொழி என்றால் இழிவானதா? கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கிணங்க பிஜேபி சகவாசம் அவரை இவ்வாறு பேச வைக்கிறது.
சேரி என்பதை குஷ்பு இழிவாக நினைத்த காரணத்தினால் தான் சேரி மொழி என்று பதிவிடுகிறார். அவரது செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சேரி என்பது அன்பு என்று சப்பை கட்டு கட்டக்கூடாது. இவ்வாறு பாவலன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
பின்னணி என்ன? நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பாலியல் ரீதியாக பேசியது பெரும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. அவர் நேற்று காவல் நிலையம் வரை சென்றார். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் வரை மன்சூர் மேட்டரை கொண்டு சென்றதே குஷ்புதான். இதனால் மணிப்பூர் விவகாரத்தில் தலையிடாத நீங்கள் மன்சூர் விவகாரத்தில் மட்டும் தலையிடுவது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். இவ்வாறு ட்விட்டரில் விளக்கியுள்ளார்.
பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரின் ஆதங்கங்கள் வலுத்தன. இந்த நிலையில் சேரி மொழி என தான் கூறியதற்கு புதியதொரு விளக்கத்தை குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்தி மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். இவ்வாறு ட்விட்டரில் விளக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications