உன் பேரு சிராஜுதீனா? "மதவெறி" நஞ்சை கக்கிய சீமான்- விசிக மீது அவதூறு கேவலத்தை தூண்டுவதா? வன்னி அரசு
சென்னை: கும்பகோணத்தில் செய்தியாளர் ஒருவரிடம் உன் பேரு என்ன? சிராஜுதீனா? அப்படித்தான் பேசுவ என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது 'மதவெறி' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு குறித்து செய்தியாளர் ஒருவர் சரமாரி கேள்வி கேட்டார். இதனால் கொந்தளித்த சீமான், விஷத்தை குடிக்கிறியா? தூக்குல தொங்குறியா? நான் தீக்குளிக்கிறேன் என டென்ஷனானார்.

அத்துடன் நிற்காமல், அப்படி கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து, உன் பேரு என்ன? என்றார். அதற்கு அவர் சிராஜுதீன் என பதிலளித்தார். உடனே சீமான், அப்ப நீ அப்படித்தான் பேசுவ என கூறினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமானின் இத்தகைய போக்கு மதவாத வெறுப்பு எனவும் விமர்சித்தனர்.
மதவெறி நஞ்சு: இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் சிராஜுதீன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் வழக்கம் போல மதவெறி நஞ்சை கக்கினார். சீமானை தொடர்ந்து அவரது தம்பிமார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தம்பி சிராஜுதீன் குறித்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

சீமானுக்கு கண்டனம்: ஊடகவியலாளர் சிராஜூதீன் அவர்களை விடுதலைச்சிறுத்தைகள் என மடைமாற்றம் செய்வதற்காக இப்படியான தவறாக அவதூறு படுத்துகிறது அக்கும்பல். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சீமான் மதவெறியுடன் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
நாம் தமிழரின் முகம்: இப்போக்கு,ஆடையை வைத்து அடையாளம் காணுங்கள் என மோடியும் RSS இயக்கமும் பரப்புரை செய்ததை செயல்படுத்துகிற கட்சியாக நாம் தமிழர் மாறிவிட்டதையே உறுதிப்படுத்துகிறது. இப்படியான இழிசெயலை
தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு சீமானுக்கு உண்டு. ஆனால்,அதை அவர் செய்யப்போவதில்லை. ஏனென்றால்,அவரே தான் இதை இந்த கேவலத்தை தூண்டிவிடுகிறார். இவ்வாறு வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications