பிடிச்சுக்குங்கண்ணே.. திருமாவளவனுக்கு வந்த சோதனை.. சேர்லயே செம ஜம்ப்.. தாங்கிய சிறுத்தைகள்.. வீடியோ
திருமாவளவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: மழைநீர் காரணமாக, ஒவ்வொரு நாற்காலியிலும் கால் வைத்து தாண்டி செல்லும், விசிக தலைவர் திருமாவளவனின் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..
Recommended Video
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. இதில் சில இடங்களில் மழை மிகவும் அதிகமாக பெய்து வருகிறது.
எனினும் சென்னை அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது...

வெள்ளம்
அந்த பாதிப்பில் இருந்து சென்னைவாசிகள் மீண்டு வர முடியாத நிலையில், அடுத்தடுத்து மழை இருக்கும் என்கிறார்கள். இப்போதே சென்னை மழை நீரால் மிதந்து கொண்டிருக்கிறது.. இதனால் இயல்பு வாழ்க்கையும் அவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமாவளவனும் வெள்ளநீரில் சிக்கிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது..

காலில் ஷூ
சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் திருமாவளவன் வசித்து வருகிறார்.. இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக சென்னை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டார்.. வழக்கம்போல் டிரஸ் அணிந்து, காலில் ஷூ போட்டுக் கொண்டு ரெடியாகி, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்..

மறுப்பு
அப்போதுதான் சுமார் 2 அடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்திருப்பதை கண்டார்.. அந்த குடியிருப்பு பகுதியே வெள்ள நீரில் சூழ்ந்திருந்தது... இதனால் ஷூவுடன் அந்த நீரில் நடந்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.. இதனை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள், நாங்கள் தூக்கி செல்கிறோம் என்று சொல்லி உள்ளனர்.. ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் திருமாளவன்.. அதனால், அங்கு போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகளின் மீது ஏறி கார் நிற்கும் இடத்துக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தார்..
வைரல் வீடியோ
அதன்படி, நாற்காலி மீது திருமாளவன் ஏறிக்கொள்ள, அவரை தொண்டர்கள் ஒருபக்கம் தாங்கி கொள்ள, தாண்டி தாண்டி சென்றார். ஒவ்வொரு நாற்காலியாக தாண்டி வந்து, கார் நின்றிருந்த பகுதிக்கு வந்துவிட்டார். அவர் அணிந்திருந்த ஷூ கடைசிவரை நனையவேல்லை.. அதற்கு பிறகு திருமாளவன் காரில் ஏறியதுமே, சென்னை ஏர்போர்ட்டுக்கு பறந்தது அந்த கார்..! ஒவ்வொரு சேர் மேலேயும் திருமாவளவன் ஜம்ப் ஆகி, ஜம்ப் ஆகி தாண்டி வரும் இந்த வீடியோதான் இணையத்தில் செம வைரலாகி கொண்டிருக்கிறது.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
நீர் அடித்து நீர் விலகுமா? பனையூர் பாபு விலகல்! முடிவை மதிக்கிறேன்! ஆனால்.. சிந்தனை செல்வன் அட்வைஸ்! -
Panaiyur Babu: விசிகவின் "வெளிச்சம்"! திருமாவளவனின் நம்பிக்கை நட்சத்திரம்! யார் இந்த பனையூர் பாபு? -
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.. 12 மாவட்டங்களில் இன்று பிச்சு உதறப் போகுது கனமழை.. வானிலை அலர்ட் -
Rain Alert: வடக்கு, கொங்கு மண்டலத்தில்.. இன்று வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் ஜில் அப்டேட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications