சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிராமணர்கள், நாடார்களுக்கு முன்பே.. "ஒரு பைசா தமிழன்".. சென்னையை சிலிர்க்க வைத்த சிறுத்தைகள்

அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்ப்பவுத்தம், தமிழ்த்தேசியம் ஆகிய புதிய பரிமாணங்களை படைத்த அயோத்திதாச பண்டிதரின் 177வது பிறந்த நாள் விழாவை விசிகவினர் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

பத்திரிக்கை கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என இப்படி பன்முகம் கொண்டவர் அயோத்திதாச பண்டிதர்.

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமுமே தடைகள் என்று சொன்னவர்.. இவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது விசிகவினரின் நீண்டநாளைய கோரிக்கையாக இருந்தது.

ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு, தமிழக அரசின் ஒத்துழைப்பால் விளைந்தது நீதி. . திருமாவளவன் பூரிப்புஜனநாயக சக்திகளின் நல்லாதரவு, தமிழக அரசின் ஒத்துழைப்பால் விளைந்தது நீதி. . திருமாவளவன் பூரிப்பு

 திருமாவளவன்

திருமாவளவன்

அதன்படி, யாருமே எதிர்பார்க்காத வகையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தின் 110விதியின்கீழ், அயோத்திதாசப் பண்டிதரின் அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் முக ஸ்டாலின்... அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டதுமே திருமாவளவன் உள்ளிட்ட விசிக தலைவர்கள் நெகிழ்ந்து போய்விட்டனர்.

 சிந்தனை செல்வன்

சிந்தனை செல்வன்

அதிலும், கண்ணீர் மல்க நெகிழ்ச்சியோடு பேசி முதல்வருக்கு நன்றியும் சொல்லியிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன்... அப்போது அவர் பேசியபோது, "கலைஞரின் மறைவின் போது அவரது உடல் எடுத்துச் செல்லும் போது என்னையறியாமல் நான் அழுதேன்.. திருமா என்னை ஆற்று படுத்தினார். தமிழ் சமூகத்திற்கு கலைஞர் ஆற்றிய பணி அவ்வளவு.

 கண்ணீர்

கண்ணீர்

அயோத்திதாச பண்டிதரின் ஒரு பைசா தமிழன் நாளிதழின் நூற்றாண்டு விழாவையும் கலைஞர் தான் கொண்டாடினார் அயோத்திதாசர் என்ற பேராளுமைக்கு நீங்கள் உருவாக்க இருக்கும் மணிமண்டபத்திற்காக இந்தத் தமிழ்ச் சமூகம் இருக்கும் வரை உங்களுக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறோம்" என்று சிந்தனைச் செல்வன் பேசியதை மறுக்க முடியாது. இன்று அயோத்திதாசரின் 177வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது..

 பாலவன் பேச்சு

பாலவன் பேச்சு

விசிகவினர் ஒன்று திரண்டு இந்த விழாவை சென்னையில் சிறப்பித்துள்ளனர்.. கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் தலைமையில் இந்த விழா நடந்துள்ளது.. தாம்பரம் சானிட்டோரியம் தேசிய சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவித்து புகழாரம் சூட்டப்பட்டது.. இதில், சி.பா.பொற்செழியன், பல்லாவரம் ரவி, மார்சல், ரஞ்சன், அற்புதராஜ், ஜெஸ்டின், வரதராஜன், அமிர்தராஜ், இரா.கணபதி, ஜெய்பீம் ஜெயகாந்தன், ந.சாமு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 புதிய பாதைகள்

புதிய பாதைகள்

இந்த நிகழ்வில் பாலவன் பேசியபோது, "திராவிடத் தந்தை பண்டிதமணி அயோத்திதாசர் புரட்சியாளர் அம்பேத்கருக்கும், தந்தை பெரியாருக்கும் முன்னோடி.. தமிழ்,சமஸ்கிருதம், ஆங்கிலம் , பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்... பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர், என பல பரிமாணங்களில் தனித்துவம் கொண்டவர்.. பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில், முன்னேற்றம் ஆகியவற்றில் புதிய பாதைகளை உருவாக்கியவர்.

 ஆதிகுடிகள்

ஆதிகுடிகள்


தமிழ்த் தேசியத்தின் தொடக்கமாகவே அயோத்திதாசர் விளங்குகிறார். தமிழ்ப் பவுத்ததின் தந்தையாக அதன் வாழ்வியல் கூறுகளை தனது ஆய்வின் வழியே எடுத்தியம்புகிறார். பிராமணர்கள் வேதம் தொடர்பான புத்தகங்களை அச்சிட்டார்கள். பிள்ளைமார்கள் சைவசித்தாந்தம் தொடர்பான நூல்களை அச்சடிக்க தொடங்கினார்கள. ஆனால் முதன்முதலில் ஆரியத்திற்கு நேர் நேரெதிரான திராவிட கொள்கை கோட்பாடுகளை உள்ளடக்கி ஆதி குடிகளின் விடுதலை கருத்துக்களையும் உள்ளடக்கி பொது செய்திகள் தாங்கி ஒரு பைசா தமிழன் வெளிவந்தது. இன்றைக்கு அச்சு ஊடகத்துறையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களும் அல்லது நாடார்களும் அத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு பண்டிதரே அதனை தொடங்கி வைத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 ஒரு பைசா தமிழர்

ஒரு பைசா தமிழர்

அவர் தொடங்கிய ஒரு பைசா தமிழர் இதழ் தொடங்கி தற்போது 145 ஆண்டுகள் ஆகிறது.. அப்படி பார்த்தால் அவரே ஊடகத் தந்தையாவார்,.. பார்ப்பனர்கள் மற்றும் நாடார்கள் பத்திரிக்கை தொடங்குவதற்கு முன்பே அயோத்திதாசர் பண்டிதர் பத்திரிக்கை தொடங்கியுள்ளார்... திராவிடர்களுக்கென்று முதன் முதலில் இயக்கம் தோற்றுவித்தவரும் அவரே.. ஒரு பைசா தமிழனை கொண்டாடுவோம் என்றார்.

English summary
VCK members celebrates dravidian movements iyothee thass birth anniversary in chennai அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X