24 மணி நேரமும் அரசியல் செய்பவன் நான்! என்னிடமே அரசியலா? நெவர்! திருமாவளவன் எடுத்த தீர்க்கமான முடிவு!
சென்னை: 24 மணி நேரமும் அரசியல் செய்பவன் நான் என்றும் தனக்காக தனிப்பட்ட முறையில் நேரம் செலவிட்டதே கிடையாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீறியிருக்கிறார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு திருமாவளவன் மாறுகிறார் என சிலர் கிளப்பிவிட்டுள்ளதை அறிந்து கொதித்துப் போன அவர், யார் ஆதரித்தாலும், யார் ஆதரிக்காவிட்டாலும், வெற்றி வாய்ப்பை பெற்றாலும் சரி -இழந்தாலும் சரி சிதம்பரம் தொகுதியில் தான் நிற்பேன் என மிகத் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
தாம் சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாறவுள்ளதாக கடலூர் மாவட்ட லோக்கல் திமுக நிர்வாகிகள் சிலர் தான் கிளப்பி விட்டிருப்பார்கள் என்று யூகித்த திருமாவளவன் சூசகமாக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஒரு முறை இரு முறை அல்ல 7 முறை போட்டியிட்டிருக்கிறேன் என்றும் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறேன் எனவும் தொகுதியை அந்தளவுக்கு தாம் நேசிக்கிறேன் எனவும் செண்டிமெண்டாக பேசியிருக்கிறார் திருமாவளவன்.
தாம் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ள திருமாவளவன், யாரோ தனக்கு வேண்டாத சிலர் தான் தாம் தொகுதி மாறவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தனது சொந்தத் தொகுதி என்றும் இந்த தொகுதிக்கு எதிராக தாம் ஒரு போதும் செயல்பட்டதே இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் மக்களோடு இருக்கும் அரசியல் தலைவர் தாம் என்றும் தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் சுற்றி வந்துக் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அதேபோல் விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலும் கடந்த முறையை போல் இம்முறையும் விசிகவே போட்டியிடுமா அல்லது திமுக நேரடியாக களமிறங்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications