• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிபரே.. நிலத்தை வித்துட்டு வீடு வாங்குங்க.. வைரலான செய்தி.. "இது உண்மையாண்ணே".. வன்னி அரசு கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: "சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் இருக்கும் நிலம்..'' - ஆதாரத்துடன் அம்பலம்" என்ற செய்தியை பகிர்ந்துள்ள விசிகவின் வன்னி அரசு, "இது உண்மையாண்ணே" என்று சீமானிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு கடலூரில் தீபன் படத்திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விழாவில் அவர் பேசியதாக சில செய்திகள் சோஷியல் மீடியாவில் பரவின.

அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்

அதில், "என்னிடம் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? எப்படி சாப்பிடுகிறாய் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் செலவு செய்கிறேன், எனக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது என்றும் கூறுகிறார்கள்..

வருவாய்

வருவாய்

எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? வருதுன்னு சொல்லுறீங்க... அப்ப உங்களுக்கு எங்கேயிருந்து வருதுன்னு சொல்லுங்க. அதை பத்தி புலனாய்வு பண்ணுங்க.. மற்றவர்கள் எல்லாம் இவ்வளவு பெரிய வீடுகளைக் கட்டி வாழ்கிறார்கள். ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, உண்மையில் எனக்கு வீடு இல்லை.. இந்த நாட்டையே அடைய துடிக்கும் எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்?

 கோழிகள், புறா

கோழிகள், புறா

அடுத்த மாதம் காலி பண்ணணும். என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்க போவது? நானும் என் மனைவியும்னா பரவால்ல. நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம். ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடுறது? எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான் தெரியுமா?" என்று ஆதங்கத்துடன் கேள்விகளை கேட்டிருந்தார்.

 கவலை

கவலை

மேலும், சீமான் பேசியதாக கூறப்பட்ட அந்த தகவல்கள் அத்தனையும் சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. இதை அடிப்படையாக வைத்து பலரும், உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.. மேலும் சிலர், சென்னை வளசரவாக்கத்தில் அவர் வாடகைக்கு இருக்கும் பிரமாண்ட வீட்டினை காட்டி, இதுதான் சீமான் வசிக்கும் எளிமையான வீடு என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 ஆதாரங்கள்

ஆதாரங்கள்

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்று இது தொடர்பான ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. ஒரு நிலத்தின் விவரங்களை குறிப்பிட்டு, சில ஆதாரங்களையும் அது தெரிவித்திருந்தது.. "அதிபரே, கொடைக்கானல்ல இருக்குற இந்த 6 ஏக்கர் நிலத்தை வித்து, சென்னையில வீடு வாங்கிக்கலாமே... எதுக்கு பிச்சை எடுக்குறீங்க? நல்ல விலைதான் போகுது வித்துட்டு வீடு வாங்குங்க. 2.43 ஹெக்டேராம், அப்படியென்றால் 6 acre. 6 acre = 2, 61, 360 சதுர அடி. ஒரு சதுர அடி இன்று 115 ரூபாய் என்றால் இடத்தின் சந்தை மதிப்பு 3கோடியே 36 லட்சம்" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

பதிவு

பதிவு

இதையடுத்து, இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானது.. இது குறித்துதான், விசிகவின் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சீமானுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் இருக்கும் நிலம்..'' - ஆதாரத்துடன் அம்பலம்" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.. அத்துடன் "இது உண்மையாண்ணே" என்றும் சீமானிடம் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

ட்வீட்டர்வாசிகள்

ட்வீட்டர்வாசிகள்

இதற்கு ட்விட்டர்வாசிகள் பலரும் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "ஏன் ஒரு முன்னாள் அமைச்சரின் மகளுக்கு நிலம் இருக்கக்கூடாதா? என்றும் சீமான் பெயரை சொன்னாலே சும்மா அறிவாலயமே அதிருது இல்லை என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன...

English summary
VCK Vanni arasu tweeted about Seemans Kodaikanal property news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X