எழுந்ததும் முதல் நினைப்பு நீ.. கிருபா முனுசாமி எழுதியதாக காதல் கடிதங்களை ரிலீஸ் செய்த விசிக விக்ரமன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும் பிக்பாஸ் பங்கேற்பாளருமான விக்ரமன் மீது வழக்கறிஞர் கிருபா முனுசாமி பல்வேறு பாலியல் அத்துமீறல் புகார்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி தமக்கு எழுதியதாக காதல் கடிதங்களை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார் விக்ரமன்.
ஊடகத்துறையில் பணியாற்றிய விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து செய்தித் தொடர்பாளரானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அறம் வெல்லும் என முழக்கத்தை முன்வைத்து பெரும் ஆதரவைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் வெல்ல வேண்டும் என்றெல்லாம் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தது பேசுபொருளாகி இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருபா முனுசாமி விக்ரமன் மீது பல்வேறு புகார்களை கூறியிருந்தார். பின்னர் இந்த புகார் விவகாரம் சற்று அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
விசிக விக்ரமன் தம்மை மட்டுமல்லாமல் மொத்தம் 15 பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி இருக்கிறார்; LQBTQ பிரிவின் Qeer ஆண்களையும் கூட விக்ரமன் ஏமாற்றி இருக்கிறார் எனவும் கிருபா முனுசாமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதாரங்கள் என வாட்ஸ் அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறார். மேலும் விக்ரமன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அமைத்த் குழுவிடம் ஆதாரங்கள் கொடுத்தும் அந்த அறிக்கை இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் இன்னொரு குற்றச்சாட்டையும் கிருபா முனுசாமி முன்வைத்திருந்தார். மேலும் விக்ரமன் பண மோசடி செய்ததார் என்பதும் கிருபா முனுசாமியின் புகார்.
Proof that I paid back the sum of Rs.12,00,000 the day after I received my big boss payment as I already promised her. pic.twitter.com/kCzHPbb3tk
— Vikraman R (@RVikraman) July 17, 2023
இப்புகார்களை திட்டவட்டமாக தமது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார் விக்ரமன். இது தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்துள்ள விக்ரமன், தம் மீதான பண மோசடி புகார்களுக்கும் பதிலளித்துள்ளார். கிருபா முனுசாமியிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் விக்ரமன் கூறியிருக்கிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பணத்தில் ரூ12 லட்சத்தை உடனடியாக கிருபா முனுசாமிக்கு கொடுத்துவிட்டதாகவும் இதற்கு ஆதாரமாக வங்கி கணக்கு ஸ்கிரீன்ஷாட்டுகளையும் விக்ரமன் வெளியிட்டிருக்கிறார்.
I deny the allegations made against me by Ms. Kiruba Munusamy in entirety. A coin has two sides likewise this story also has two sides. "There is only one victim in this issue and it is me rather than the person making the accusations against me".
— Vikraman R (@RVikraman) July 17, 2023
We were acquaintances till… pic.twitter.com/IGCFE0PrBl
அத்துடன் கிருபா முனுசாமி லண்டனில் இருந்து தமக்கு எழுதிய காதல் கடிதங்கள் என கையால் எழுதப்பட்ட கடிதங்களின் பக்கங்களை விக்ரமன் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில் சினிமா பாடல்களை மேற்கோள்காட்டி விக்ரமனுடனான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்டிருக்கிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications