கருப்பு பணத்தை இப்படித்தான் ஒழிப்பதா.. ஒரு போட்டோவை போட்டு நிர்மலா சீதாராமனுக்கு வீரலட்சுமி வார்னிங்
சென்னை: கருப்பு பணத்தை ஒழிப்பது இதுதானா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழர் முன்னேற்ற படைத் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழர் முன்னேற்ற படைத் தலைவர் வீரலட்சுமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வணக்கம். பாஜகவின் மாநில அணி பொருளாளர் மாலினி ஜெயசந்திரன், முன்பு ஜல்லிக் கற்களை ரூ 2000, 3000 க்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

பாஜகவில் சேர்ந்தவுடன் ரூ 3000 கோடியில் சொத்து மாலினி ஜெயசந்திரனுக்கு எப்படி வந்தது? அந்த பணம் எல்லாம் யார் அப்பன் வீட்டு பணம்? மத்திய அரசின் வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் சிபிஐயும் மாலினி ஜெயசந்திரனின் ரூ 3000 கோடி சொத்தை கண்டுபிடிக்காத நிலையில் தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
அதில் 1500 கோடி ரூபாய் சொத்து மதிப்புக்கு ஆதாரங்களுடன் வருமான வரித் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து வைத்துள்ளேன். சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து ஆதாரங்களை சேகரித்து புகார் அளித்த இந்த வீரலட்சுமியை பாராட்டாமல் வெகுமதி கொடுக்காமல் யார் பண பதுக்கலில் ஈடுபட்டார்களோ அவர்களை பக்கத்தில் நிற்க வைத்து சால்வை போர்த்தி மரியாதை செய்து புகைப்படம் எடுத்துள்ளீர்கள்.
நான் கண்டுபிடித்து கொடுத்த ரூ 1500 கோடி பாஜகவினருடைய பணமா, மத்திய அமைச்சரான நீங்கள் முறைத்தவறி, நெறித் தவறி நடக்கலாமா, இதுதான் நீங்கள் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? நான் கண்டுபிடித்து கொடுத்த பணம் எந்த வகையில் மாலினி ஜெயசந்திரன் சேர்த்தது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் வருமான வரித் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி நான் சென்னையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அலுவலகத்திலும் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன். இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதியில் மத்திய அரசு குறைத்து வழங்கிய நிலையில் உங்கள் அப்பன் வீட்டு சொத்தையா கொடுக்கிறீர்கள், பொதுமக்கள் வரிப் பணத்தைத்தானே என கேட்டிருந்தார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அந்த வகையில் நிர்மலா சீதாராமனும் உதயநிதி இந்த பதவியில் பேசுவது நல்லதல்ல என கண்டித்திருந்தார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications