சென்னையை கைவிட்ட வீராணம் ஏரி.. கைவிடாத வாலாஜா ஏரி.. அதற்கு தண்ணீர் எங்கிருந்து வருது தெரியுமா?
சென்னை: சென்னைக்கு முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரி தற்போது முற்றிலும் வறண்டு கைவிட்டது. அதேநேரம் சென்னை மக்களுக்கு என்எல்சி சுரங்க நீர் குடிநீராக அனுப்பி வைக்கப்படுகிறது. என்எல்சி சுரங்க நீர், வாலாஜா ஏரியில் தேக்கப்பட்டு அதன் வழியாக 15 கன அடி தண்ணீர் தினமும் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மிகப்பெரிய அளவில் வீராணம் ஏரி அமைந்திருக்கிறது. காவிரி ஆறு நீர் தான் இதற்கு முக்கியமான நீர் ஆதாரமாகும். இந்த இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவுடன் பறந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

குறிப்பாக சென்னை மக்களுக்கு தினமும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சமீப காலம் வரை தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை.. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து இல்லை.. அதேபோல் வடகிழக்கு பருவ மழையும் இந்த முறை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை..
தமிழ்நாட்டிற்கு விழுக வேண்டிய மொத்த மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், தூத்துக்குடி, தென்காசி மற்றும் நெல்லையிலும் விழுந்துவிட்டது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. டெல்டா பகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படி மழையே பெய்யவில்லை.
இதன் காரணமாக காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்ததாலும் கடந்த பிப்ரவரி மாதம் பாசனத்துக்கு நீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் கடலா அல்லது ஏரியா என்று வாயை பிளக்க வைத்த வீராணம் ஏரி, பிப்ரவரியில் அடியோடு வறண்டது. இதனால் கடந்த 2 வாரங்களாக வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
சென்னையை வீராணம் ஏரி இந்த முறை கைவிட்டாலும், பக்கத்தில் உள்ள வாலாஜா ஏரி கைகொடுத்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவார்கள்.. அப்படியே என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்கி வருகிறார்கள்.
வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாக இருக்கிறது. தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கிறது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி சென்னையின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரம் ஆகும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications