சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் சேவை.. தேதி அறிவிப்பு!
சென்னை: வேளச்சேரியிலிருந்து, பரங்கிமலைக்கு நேரடியாக ரயில் சேவை கிடையாது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர், இரு பகுதிகளையும் இணைக்கும் விதமாக மின்சார ரயில் பாதை அமைக்கபடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுதான் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை பேருந்து போக்குவரத்து எல்லாம் இரண்டாம்பட்சம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்துவது புறநகர் ரயில்களைதான். சென்னையை இணைப்பதில் புறநகர் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சென்னையை இணைக்கும் ரயில்கள்
குறிப்பாக தென்சென்னையை, மத்திய சென்னையுடன் இணைப்பதில் பறக்கும் ரயில்கள் பெரும் பங்காற்றுகின்றன. வேளச்சேரியிலிருந்து சென்னைக்குள் நுழைய இந்த ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பஸ்ஸில், பைக்கில், காரில் போவதை விட, இந்த ரயில்களில் போவது நேரத்தை மிச்சப்படுத்தும். அதேபோல செலவும் குறைவு. வெறும் ரூ.10 டிக்கெட்டில் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு சென்றுவிட முடியும்.
பறக்கும் ரயில்கள்
கடந்த 1995ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதன்முறையாக சென்னை கடற்கரையிலிருந்து-சேப்பாக்கத்திற்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் 1997ல் இது மயிலாப்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் வேளச்சேரி வரை ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2004ல் பணிகள் தொடங்கப்பட்டு, 2007ல் இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது தினசரி ஏறத்தாழ 1 லட்சம் பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
வேளச்சேரி-பரங்கிமலை
இருப்பினும், வேளச்சேரியிலிருந்து விமான நிலையம் வர வேண்டும் எனில் அதற்கு நேரடியாக ரயில் சேவை இல்லை. இரண்டு பகுதிக்கும் இடையில் வெறும் 5 கி.மீதான் தூரம் உள்ளது. ஆனால், சாலை மார்க்கமாக பயணிப்பதால், இந்த குறுகிய தூரத்தை கடக்க குறைந்தது 40 நிமிடங்கள் வரை ஆகும். இதனால் வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், விமான நிலையம் வர மிகவும் சிரமப்பட்டனர். எனவே இரு பகுதிகளுக்கும் இடையே ரயில் சேவை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரினர்.
18 ஆண்டுகால பணி
கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், 2008ல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் 3 ஆண்டுகளில் நிறைவடைந்த நிலையில், இந்த திட்டமும் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 18 ஆண்டுகளாக இழுபறியில் கிடந்தது. காரணம் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்தான். குறிப்பாக ஆதம்பாக்கம் மற்றும் தில்லை கங்கா நகர் இடையே வெறும் 500மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தன.
எப்போது ரயில் இயக்கப்படும்?
இந்த சிக்கல்கள் முடிவடைந்து தற்போது ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து புறப்பட்டு புழுதிவாக்கம், ஆதம்பாக்கத்தை கடந்து பரங்கிமலையை வந்தடையும். இந்த வழித்தடத்தில் மார்ச் 10ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications