Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில்.. எடப்பாடி பழனிசாமி இறக்கும் "பிரபலம்".. கொளுத்தும் வேலூரை குளிரூட்டும் "ஏ.சி".. பாஜக குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் வலுவான வேட்பாளர்களை நிறுத்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளாராம். அதற்கான வியூகங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்டு, அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில், வெற்றியை பறிகொடுத்தவர் ஏ.சி.சண்முகம்.. இந்த தோல்வியை அவரால் அப்போது ஜீரணிக்கவே முடியவில்லை.

Vellore BJP A C Shanmugam and are these ADMK Edappadi Palanisamy Important Strategies in Vellore

சபதம்: இத்தனைக்கும் இவரது பிரச்சாரம், கடந்த தேர்தலின்போது இஸ்லாமியர் சமுதாயத்தினரிடம் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.. இந்த முறை வென்றே தீருவது என சபதம் எடுத்துள்ளார்.

குடியாத்தத்தில் ஒருமுறை இவர் பிரச்சாரம் செய்தபோது, "என்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, போதிய அளவிற்கு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை.. நோயை பற்றிய விழிப்புணர்வும் இல்லை.. அதனால், என்னுடைய அம்மா 38 வயதிலேயே இறந்துட்டாங்க.. தாயில்லாத பிள்ளையாக என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க.. இப்படி ஒரு நிலைமை, எந்த ஒரு தாய்க்கும் ஏற்பட்டுவிடக் கூடாது... யாருடைய பிள்ளைகளும் தாயில்லாத பிள்ளைகளாக மாறிவிடக்கூடாது.

தாயில்லா பிள்ளை: அதுக்காகத்தான் என்னுடைய அம்மா பெயரில் இயங்கி வரும் பெங்களூர் மருத்துவமனையில் இங்கு இருக்கின்ற தாய்மார்கள் அனைவரும் இலவச மருத்துவ உதவியும், தேவைப்பட்டால் ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்" என்று பேசியிருந்தார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என்றும் அப்போதே வாக்குறுதி தந்திருந்தார் ஏசி சண்முகம்.

இப்போதும், வேலூர் தொகுதியின் இஸ்லாமியர்களின் வாக்குகள் தன்பக்கம் திரும்பும் என்றும் உறுதியுடன் சொல்லி உள்ளார்.. எம்பி தேர்தலுக்கான வேலையையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார் ஏசி சண்முகம்..

மேலிட பாஜக: கல்வி தந்தைகளாக அறியப்படும் ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் எல்லாம் எம்.பியாகி டெல்லி பக்கம் என்றோ சென்றுவிட்ட நிலையில், ஏ.சி.சண்முகம் அதற்கு முயன்று கொண்டிருக்கிறார். அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஏசி சண்முகம், பாஜகவை ஒருபோதும் எதிர்த்ததில்லை..

அதேசமயம் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால், எப்போதுமே மத்திய அரசுடன் சுமூக உறவை பேண விரும்பக் கூடியவர் ஏசி சண்முகம்.. அதனால்தானோ என்னவோ, 2 நாட்களுக்கு முன்பு இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இப்ப எம்.பி. யார் என்பதா முக்கியம்? பிரதமர் யார் என்பதுதான் முக்கியம்" என்று சொல்லி டெல்லியை வேலூர் பக்கம் திரும்ப செய்தார்..

கல்வி நிறுவனம்: ஏசி சண்முகம் என்றாலே, எம்ஜிஆரின் விசுவாசி என்றே அடையாளம் காணப்பட்டவர்.. இவரது கல்வி நிறுவனங்களில் நிறுவப்பட்டிருக்கும் எம்ஜிஆர் சிலைகளே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. அத்துடன், இரட்டை இலையுடன் தன்னுடைய தொகுதிகளுக்கு சென்று வாக்கு கேட்டவர்.. இருந்தாலும் தற்போது, அதிமுகவுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? என்று உறுதியாக தெரியவில்லை..

ஒருவேளை, பாஜக பக்கம் நின்று தாமரை சின்னத்திலேயே ஏசி சண்முகம் போட்டியிட நேர்ந்தால், இதையும் எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தயாராகவே இருக்கிறாராம்... ஏசி சண்முகம் எப்படியும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெற்றுவிடுவார் என்பதால், வேலூர் தொகுதியில் பிரபலமான நபரை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறாராம்.

பிரபல வேட்பாளர்: அதேபோல, "தாராளங்களை" பற்றியெல்லாம் ஏசி சண்முகம் கவலைப்பட மாட்டார் என்பதால், அதிமுகவும், இந்த முறை பசையுள்ள நபர்களை களமிறக்க தயாராகி வருகிறதாம்.

ஆனால், ஏசி சண்முகத்தின் வியூகமோ, திமுகவை குறி வைத்துள்ளது. கடந்த முறை திமுகவிடம் இழந்ததை, இந்த முறை பெற்றுவிடுவது என்ற முனைப்பில் உள்ளாராம். அதனால்தான், பருவமழையும், குளிரும் தொடங்கிவிட்ட நிலையிலும் தற்போது வேலூரில் மட்டும் "அனல்" அடித்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

தேனி: இதுபோலவே, தேனி மற்றும் நீலகிரியிலும், புதிய வேட்பாளர்களை இறக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறாராம்.. இதில் தேனி மாவட்டத்தில், ஓபிஎஸ் மகனுக்கு எதிராக, பிரபலத்தை களமிறக்க முடிவு செய்துள்ளாராம்.. அந்தவகையில், அவர், தமிழகம் அறிந்த பெண் பிரமுகர் என்றும் சொல்கிறார்கள். ஆனால் யாரென்று தெரியவில்லை.

ஆனால், அதிமுகவை பொறுத்தவரை, நீலகிரி மாவட்டத்தில் இருந்து தான் பெரும்பாலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை போட்டி சற்று கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.

நீலகிரி: காரணம், நீலகிரி தொகுதியில் குன்னுார், கூடலூர் தொகுதியில் திமுக ஓட்டு வங்கியும், ஊட்டி தொகுதியில் பாஜகவின் ஓட்டு வங்கியும் அதிகமாக உள்ள நிலையில், அவிநாசி, மேட்டுப்பாளையத்தில் அதிமுக அதிமுக ஓட்டுக்களை மட்டுமே அதிமுக தக்க வைத்துள்ளது. எனவே, ஆ.ராசா, மற்றும் எல்.முருகனுக்கு நிகராக, வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் வேண்டும் என்ற நெருக்கடி அதிமுக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+