உங்களுக்கு யார் கொடுத்த அதிகாரம் இது? மதுரை காமராஜர் பல்கலை.துணைவேந்தர் மீது வேல்முருகன் பாய்ச்சல்!
சென்னை: அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் ரவி ஒரு ஆர்.எஸ்.எஸ்.ஆதரவாளர் என்றும் அவருக்கு துணை போகக்கூடியவராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இருக்கிறார் எனவும் வேல்முருகன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எண்ணிக்கையின் அடிப்படையில் 30 மாணவர்கள் சேர்க்கப்படும் என்றும் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது சரி தான். ஆனால், மாணவர்கள் சேர்க்கையில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது கண்டனத்துக்குரியது.

உயர்வகுப்பு ஏழைகளுக்கு
இதுபோன்று, முதுநிலைப் படிப்பில் 10 விழுக்காடு உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாடு அரசின் நிதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு சில படிப்புகளுக்கு நிதி உதவி தருகிறது என்பதற்காகவே அதன் இட ஒதுக்கீடு கொள்கையை தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

சந்தேகம் எழுகிறது
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடே தொடரும் என நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த உத்தரவானது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். இந்த நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை துணைவேந்தராக நியமித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவின் பேரில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிப்பு, 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்குதல் போன்றவற்றை துணைவேந்தர் செயல்படுத்துவதாக தோன்றுகிறது.

நடவடிக்கை வேண்டும்
எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, ஆர்.எஸ்.எஸ்- சின் ஆதரவாளர் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு துணைபோகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முது அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்குதல் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications