வறுமையை போக்க வந்த "சிவப்பு".. சீறிய சங்கநாதம்.. எளிய மனிதர்களின் "தங்கய்யா".. என். சங்கரய்யா!
என். சங்கரய்யாவின் 100வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது
சென்னை: "வறுமையின் நிறம் சிவப்பு அல்ல.. வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு" என முழக்கமிட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் இன்று..!
Recommended Video
சமூக வேள்வியில் சிக்கி, மீண்டு வர முடியாமல் தகித்து கிடக்கும் மக்களை விடுவிக்க ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விடிவெள்ளிகள் தோன்றுவார்கள்.. அப்படிப்பட்ட விடிவெள்ளிகளில் ஒருவர்தான் தோழர் சங்கரய்யா!
இவரது முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்து நடந்ததுதான்.. இந்திய போராட்டம் தொடங்கி, மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் வரை சங்கரய்யாவின் பெயர் உச்சரிக்காமல் நடந்ததில்லை..
ஜெயில்

சிறை தண்டனை
8 வருஷம் ஜெயில்.. 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கை என பல தியாகங்களை தன்னகத்தே கொண்டவர்... எத்தனையோ அடக்குமுறைகளின் தடியடிக்கு ஆளானவர்.. எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளானவர்.. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்தாலே, மொத்த இளைஞர் கூட்டத்துக்கும் நரம்புகள் புடைக்குமாம்.. அந்த அளவுக்கு நெருப்பு வார்த்தைகளை கக்கி அனலடிக்க செய்வார்.. மிகச்சிறந்த இலக்கியவாதியும்கூட.. ஜனசக்தி, தீக்கதிர் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர்!

சாதி மறுப்பு திருமணம்
தொழிலாளர் நலன்களில் அக்கறை காட்டியவர்.. உழைக்கும் வர்க்கத்தின்மீது ஓயாமல் பாசத்தை காட்டியவர்.. எந்த மேடை ஏறினாலும், சாதி மறுப்புத் திருமணங்களை பற்றிதான் அதிகமாக பேசுவார்.. "குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு வரலாம்.. விரோதம் வரும்... ஆனாலும் சாதி மதம் பார்க்காமல் உங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று ஓயாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தவர்...

நட்பு
இவர் மீது கருணாநிதிக்கு அப்படி ஒரு பாசம்.. இவர்களின் நட்பு மிக மிக ஆழமானது.. அதாவது, திமுக கூட்டணிக்குள் சிபிஎம் கட்சியே, இல்லாவிட்டாலும்கூட இவர்களின் நட்பு மட்டும் வானமே எல்லையாய் விரிந்து கிடந்தது.. கருணாநிதி அமைச்சராக இருந்தபோதிருந்தே சங்கரய்யாவின் எத்தனையோ கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தவர்.. முதல்வரான பிறகு, சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரய்யாதான்.

திராவிட இயக்கம்
சங்கரய்யா கருணாநிதியைவிட 3 வயது பெரியவர்.. ஆனால் மிகுந்த பற்று உள்ளவர்.. ஒருமுறை கருணாநிதி பேசும்போது, "திராவிட இயக்கம் என்ற ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால்.. பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால்.. அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால்.. நான் நல்லகண்ணு பக்கத்திலும், சங்கரய்யா பக்கத்திலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவராக உட்கார்ந்திருப்பேன்" என்று நெஞ்சுயர்த்தி சொன்னார்.

பிறந்தநாள்
அதேபோலதான் சங்கரய்யாவும்.. ஒருபேட்டியில் இவர் .. "ஜூலை 15-ம்தேதி எனக்கு பிறந்தநாள்.. அன்னைக்கு காலைல 6 மணிக்கு எனக்கு ஒரு போன் தவறாமல் வந்துவிடும்.. அது நிச்சயம் கருணாநிதியிடமிருந்து வரும் போனாகத்தான் இருக்கும்... நானே அதை நிறைய நேரத்தில் மறந்துடுவேன்.. ஆனால், அவர் என் பிறந்தநாளை மறந்ததில்லை.. அவருக்கு உடம்பு சரியில்லாததில் இருந்து அவடமிருந்து போனே வரவில்லை" என்று நா தழுதழுக்க சொல்லியிருந்தார்.

கண்ணீர்
கருணாநிதி மறைந்தபோது இவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அஞ்சலி செலுத்தவும் போக முடியவில்லை.. வீட்டில் இருந்து கொண்டு, கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்தார் சங்கரய்யா.. அப்போது திடீரென உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்..

இறுதி ஊர்வலம்
முகமெல்லாம் சோகம் வடிந்து நின்றது. கண்களிலிருந்து சங்கரய்யாவுக்கு தண்ணீர் வழிந்தோடி வந்தது... அடக்க முடியாமல் அழுது கொண்டு, கண்ணீரை தன் கைகளால் துடைத்துக் கொண்டே இருந்தார்.. கண்ணீரோ வழிந்து கொண்டே இருந்தது.. இறுதி ஊர்வலத்தை பார்த்த சங்கரய்யா, "போய் வா... போய் வா" என்பது போல தன் கைகளை உயர்த்தி உயர்த்தி காட்டிய அந்த உணர்ச்சி பெருக்கின் தருணம் மறக்க முடியாதது.. நெகிழ்வின் பிணைப்பு அது.. பாசத்தின் அதிதீவிரம் அது.. நட்பின் உச்சக்கட்ட அடர்த்தி அது..!

சங்கநாதம்
ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் என்று வாழ்ந்தவர் என். சங்கரய்யா.. ஒரு தமிழக தலைவரை இன்று தேசமே போற்றி கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், சங்கரய்யா அன்று முழங்கிய அடிநாத
"சங்க நாதம்"தான்...!

மார்க்ஸ்
"வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான்" என்கிறார் மார்க்ஸ்.. அப்படி ஒரு வரலாறைதான் என்.சங்கரய்யாவும் வாழ்ந்து வருகிறார்.. இந்திய துணை கண்டத்தில், மார்க்சிய இயக்கம் மகத்துவம் பெறும் என்றால், அது சங்கரய்யா போன்ற தோழர்களின், ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதில் சந்தேகமே இல்லை..!

விருப்பம்
"எனக்கு இது ஒன்னுதான் ஆசை... இன்றைய வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்து போராடணும்.. அன்னைக்கு எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் போராடினாங்களோ, அதே போல போராடணும்.. சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் இது முடியாது.. மார்க்ஸ் தான் ஒரே தீர்வு.. வேற வழியேயில்லை" என்று தன் ஆதங்கத்தை சொல்லி கொண்டேன் இருக்கிறார் சங்கரய்யா..!

சங்கநாதம்
முன்பெல்லாம் பொதுக்கூட்டங்கள் என்றாலே இவரிடம் தான் ஏற்பாடு செய்ய சொல்லுவாங்களாம்.. காரணம், கட்சி கொள்கைகளின் பாடல்களை பாட வைத்தே எவ்வளவு பேர் என்றாலும் கூட்டத்தை திரட்டி விடுவாராம். ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் என்று வாழ்ந்தவர் என். சங்கரய்யா.. ஒரு தமிழக தலைவரை இன்று தேசமே போற்றி கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், சங்கரய்யா அன்று முழங்கிய அடிநாத
"சங்க நாதம்"தான்...!

மார்க்ஸ்
"வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான்" என்கிறார் மார்க்ஸ்.. அப்படி ஒரு வரலாறைதான் என்.சங்கரய்யாவும் வாழ்ந்து வருகிறார்.. இந்திய துணை கண்டத்தில், மார்க்சிய இயக்கம் மகத்துவம் பெறும் என்றால், அது சங்கரய்யா போன்ற தோழர்களின், ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதில் சந்தேகமே இல்லை..!












Click it and Unblock the Notifications