K.Rajan: பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! அடையாறு கூவம் ஆற்றில் குதித்தது ஏன்? இதுதான் காரணமா?
சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். தைரியமான இவர் இந்த விபரீத நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம். அவருக்கு 85 வயது.
ராஜன் பிரம்மசாரிகள் என்ற படத்தை தயாரித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இவர் சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவர் பைனான்சியராகவும் இருந்தார்.

மிகவும் தைரியமானவர். நடிகர்கள், நடிகைகள் ஆகியோரின் ஊதியம் குறித்து பேசுவார், அது போல் தியேட்டர்களில் தின்பண்டங்களின் கட்டணம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
மேடையில் அவர் பேச தொடங்கினாலே எதை பற்றி பேச போகிறாரோ என இருக்கும். அந்த அளவுக்கு மனதில் பட்டதை பேசுவார். இந்த நிலையில் அவர் அடையாறு கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இந்த முடிவுக்கு என்ன காரணம் என உறுதியாக தெரியவில்லை. எனினும் இதுகுறித்து மற்றொரு தயாரிப்பாளரான ஏ.எல்.அழகப்பன் கூறுகையில், மிகவும் நல்ல மனிதர், அவர் தைரியமானவர். மனதில் தோன்றியதை பட்டென பேசக் கூடியவர்.
விளம்பர பிரியர். தன்னை பற்றிய செய்தி பேப்பரில் வர வேண்டும் என நினைப்பார். எப்போதுமே துடுக்காகவே பேசுவார். இதனால் அவர் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தார். மேலும் பலருக்கு நன்மைகளை செய்துள்ளார். இன்றும் அவரால் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவரது குடும்பத்தில் சில பிரச்சனை காரணமாக ஓராண்டாக அவர் தனியே ஹோட்டலில் தங்கியுள்ளார். அவருக்கு உணவு மகள் வீட்டில் இருந்து வருவதாக தெரிவித்தார். அவருக்கு காசு பணத்திற்கு எந்த குறைவும் இல்லை.
ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. கடந்த வாரம் தயாரிப்பாளர் சவுத்ரி ஒரு விபத்தில் சிக்கி இறந்தார். அது போன்ற ஒரு மரணம் என்றால் நம்மால் ஏதோ ஜீரணிக்க முடியும். ஆனால் கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது என்பது மனதிற்கு வருத்தத்தை கொடுக்கிறது. இவ்வாறு அழகப்பன் தெரிவித்தார்.
எனவே கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டது குடும்ப பிரச்சினை காரணமா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications