இமாசல பிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த.. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் தகனம்
சென்னை: சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வெற்றி துரைசாமி உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்தார் சைதை துரைசாமி. சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது. ரத்தக்கறை மாதிரிகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் மற்றும் அரசியல் தலைவர்கள் திருமாவளவன், சீமான், சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வெற்றி துரைசாமி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் இரவு 9 மணியளவில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக மனித நேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது பூத உடல் பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications