எங்கிருந்து குதிக்குறாரு பாருங்க.. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் நீச்சலடித்து மகிழும் இளைஞர்கள்
சென்னை: சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் அதில் குதித்து நீச்சலடித்து விளையாடி இளைஞர்கள் மகிழும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெளியேற வழியில்லாத காரணம். ஒரே நேரத்தில 20 செமீக்கு மேல் பெய்த மழை, சென்னையை புரட்டி போட்டுள்ளது.
சென்னையில் 2015க்கு பிறகு மோசமான மழையை சந்தித்துள்ளது. இதனால் . தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.. மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் வரமுடியாது
இதேபோல் சேத்துபட்டு - பூந்தமல்லி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அதிக அளவு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்து என்பதால் மூடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் குதித்தனர்
விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதுமாக மூழ்கியது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் சுரங்கப்பாதையை நீச்சல் குளமாக மாற்றி குதித்து விளையாடி வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வடசென்னைதான் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் வெள்ளநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது,

வானிலை மையம்
இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

மழை பெய்யும்
இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

கடலுக்கு போக வேண்டாம்
இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்" இவ்வாறு வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications