பிரதமர் ஆபீசில் இருந்து ஆர்டர்.. வாட்ஸ்அப் மூலமாக மிரட்டிய அங்கித் திவாரி: FIRல் வெளியான பரபர தகவல்!
சென்னை: அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரி, திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கச் சொன்னதாகக் கூறி அவர் அரசு மருத்துவரை மிரட்டியதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இவர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக நுழைந்து விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சுமார் 13 மணிநேரம் நடைபெற்ற சோதனையானது இன்று காலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அங்கித் திவாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, அந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும் பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார்.
கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ. 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார். இல்லையென்றால், ஆவணங்களை மேலிடத்திற்கு அனுப்பி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
அங்கித் திவாரியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மருத்துவர் சுரேஷ்பாபு, 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக 01.12.2023 காலை 10.30 மணியளவில் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையின்போது இவருக்குத் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரையேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications