நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்! - மனைவி சங்கீதா
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். விஜய் அரசியல் களத்தில் கால் பதித்திருக்கும் நிலையில், இந்த விவாகரத்து சம்பவம் பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது. அதிலும் விவகாரத்துக்கான காரணமாக சங்கீதா சொன்ன விஷயம் விஜய் மீதான விமர்சனத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக களமிறங்குகிறது. அதேபோல, விஜய்யும் நேரடியாக போட்டியிட இருக்கிறார். இப்படி இந்த சூழலில்தான் விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

விஜய்-சங்கீதா காதல்
90களில் கலக்கலான படங்களை கொடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். அவருடைய மகன்தான் விஜய். அப்பா இயக்குநர் என்பதால், இயல்பாகவே திரைத்துறை குறித்த அறிமுகம் விஜய்க்கு இருந்தது. எனவே விஜய் எளிதாக நடிப்பை கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைந்தார். இப்படி நுழைந்த இவர், 1996ல் சங்கீதா எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். சங்கீதாவின் பூர்வீகம் இலங்கை. அவர் இலங்கை தமிழர். இவர் லண்டனில் வசித்து வந்திருந்தார்.
திருமணம் எப்படி நடந்தது?
அப்போது 'பூவே உனக்காக' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த சங்கீதா, எப்படியாவது விஜய்யை சந்தித்து பாராட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டார். இதற்காகவே அவர் சென்னை வந்திருந்தார். அந்த சமயம் விஜய் பிலிம் சிட்டில் சூட்டிங்கில் இருந்தார். நீண்ட நேரம் காத்திருந்து அவரை நேரில் சந்தித்து சங்கீதா பாராட்டை தெரிவித்தார். இந்த சந்திப்புதான் இருவருக்கும் இடையே ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியது.
காதலை ஏற்றுக்கொண்ட குடும்பம்
சங்கீதாவின் அணுகுமுறை விஜய்யை வியப்படைய வைத்தது அவருடைய பேச்சு, பழக்க வழக்கம், பிடித்தவர்களிடம் அவர் காட்டும் அன்பு உள்ளிட்டவை, சங்கீதா மீது விஜய்யை காதல் கொள்ளவைத்தது. இருவரும் ஓரிரு ஆண்டுகள் காதலர்களாக பழகினர். பின்னர் இவருவரின் பெற்றோர்களிடம் தங்கள் காதலிப்பதை தெரிவித்தனர். பின்னர் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படியாக 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
காதலும்-மோதலும்
ஆனால், இந்த திருமண வாழ்க்கையில் சங்கீதா சந்தோஷமாக இல்லை என்று தொடர்ந்து தகவல்கள் பரவின. குறிப்பாக வாரிசு ஆடியோ லாஞ்சுக்கு சங்கீதா வராதது திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டது. அட்லீயின் இல்ல விழாவிலும் விஜய் சோலோவாகத்தான் கலந்துக்கொண்டார். சினிமா நிகழ்ச்சிகளில் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்காதது கூட பரவாயில்லை, ஆனால், அட்லீயின் மனைவி வளைகாப்பு விழாவில் கூட விஜய் மட்டும் தனியாக பங்கேற்றிருந்தது, விஜய்க்கும்-சங்கீதாவுக்கும் செட் ஆகவில்லை என்பதை ஓரளவுக்கு உறுதி செய்திருந்தது.
விவாகரத்து கோரி மனு
இருப்பினும் இந்த விஷயம் தொடர்பாக விஜய்யோ, சங்கீதாவோ எதையும் வெளிப்படையாக பேசவில்லை. இதற்கிடையில்தான் விஜய் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் விவாகரத்து கோரி விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மனுவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், இது குறித்து தான் வெளிப்படையாக எச்சரித்ததாகவும், ஆனால், எச்சரிக்கையை மீறி அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வது, பொது வெளியில் இந்த உறவை நார்மலானதாக மாற்ற முயற்சிப்பது, இவர்களின் பயணத்தை நடிகை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்வது என இருவரின் உறவும் எல்லை மீறி சென்றிருப்பதாகவும், தேவையெனில் இதற்கான ஆதாரத்தை வெளியிடுவதாகவும், எனவே விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் சங்கீதா தனது விவாகரத்து மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications