சங்கீதா மேல அவ்வளவு பாசம்.. மனைவியை விட்டுத் தராத விஜய்! மாநாட்டு தேதியில் இப்படி ஒரு சர்ப்ரைஸ்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார் நடிகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இந்த நிலையில் மாநாட்டு தேதியில் ஒரு சுவாரசிய விஷயம் இருக்கிறது. வேறொன்றுமில்லை. அன்று தான் விஜய் தனது திருமண நாளை கொண்டாடுகிறார் என்பது கூடுதல் தகவல்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் கட்சியின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சி ஆரம்பித்தாலும் அறிக்கை அரசியல் தான் செய்கிறார், ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என விஜய் மீது விமர்சனங்கள் எழுந்தது.

அதனை தவிடு பொடியாக்கும் வகையில் பல்வேறு விவகாரங்களை நேரடியாகவே தலையிட்டார். பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவினரை சந்தித்தது, சிவகங்கை காவல் மரணத்தில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தது, அடுத்ததாக சென்னையில் காவல் நிலைய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் என விஜய் தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது அரசியல் மாநில மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இதற்கு முன்னர் மாநாடு குறித்த பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில் இந்த மாநில மாநாடு குறித்து அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று காலை மாநாட்டுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களே மினி மாநில மாநாடு போல கூட்டத்தை திரட்டியது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க தற்போது விஜய் ரசிகர்கள் மாநாட்டு தேதியில் ஒரு சுவாரசியத்தை கண்டுபிடித்திருக்கின்றனர். அது வேறு ஒன்றும் அல்ல அன்றுதான் விஜய் தனது 26வது திருமண நாளை கொண்டாடுகிறார்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டில் தான் விஜய் தனது ரசிகையான லண்டனைச் சேர்ந்த சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அந்த ஜோடிக்கு சஞ்சய், திவ்யா என இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் சஞ்சய் வளர்ந்து தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். திவ்யா மேல்படிப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் சங்கீதா தம்பதி குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் உலாவி வரும் நிலையில், தனது இரண்டு கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை தனது திருமண நாளிலேயே அறிவித்திருக்கிறார் விஜய். இதன் மூலம் தனது குடும்ப வாழ்வு குறித்த விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
-
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications