அருண்ராஜை விடுங்க.. 2026ல் விஜய் எங்கே போட்டி தெரியுமா? டேபிளில் ரெடியாக லிஸ்ட்! வி சென்டிமென்ட்?
சென்னை: 2026 தேர்தலில் முதன்முறையாக போட்டியிடப் போகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இந்த நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் மூன்று தொகுதிகள் விஜயின் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வழக்கம் போல 'வி' சென்டிமென்ட் காரணமாக சில தொகுதிகளை விஜய் தேர்ந்தெடுத்து இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படும் சூழலில், திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம்
முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கும் தவெக, முதல் முயற்சியிலேயே அரசியல் ரீதியாக வலுவான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. "தவெகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும்" என அறிவித்துள்ள போதிலும், தற்போது வரை அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து கட்சிக்குள் ரகசிய சர்வே மற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய் 2026 தேர்தல்
அந்த வகையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜய், எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கட்சி வியூக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். தவெக வட்டார தகவல்களின்படி, விஜய் போட்டியிட ஏற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருவாடானை ஆகிய தொகுதிகள் தான்.
விஜய் சட்டமன்ற தொகுதி
திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கருமாணிக்கம் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறார். இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போதைய அரசியல் சூழல், வாக்காளர் மனநிலை, கட்சி சார்பில்லாத இளைஞர் வாக்குகள் ஆகியவை தவெகக்கு சாதகமாக இருப்பதாக சர்வே முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
திருச்சி கிழக்கு
இதில் குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மீது தவெக தலைமை அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்தத் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதாலும், விஜயின் பொதுவான அரசியல் நிலைப்பாடுகள் அந்த வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், இந்தத் தொகுதி அவரது முதன்மை தேர்வாக இருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தல்
மேலும், விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியிலிருந்துதான் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் உரையாற்றிய காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி, திருச்சி கிழக்கு தொகுதிக்குள் வருவது தவெக வட்டாரங்களில் 'அரசியல் சிக்னல்' என பார்க்கப்படுகிறது.

விஜய் வி சென்டிமென்ட்
இதுமட்டுல்லாமல் விஜயின் 'வி' செண்டிமெண்ட் படியில் இரண்டாம் பட்டியலில் சில சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விருதுநகர், விளாத்திகுளம், வால்பாறை, வேதாரண்யம், விழுப்புரம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் உள்ளன. அதில் விருகம்பாக்கம் முதலிடம் உள்ளது. காரணம் விஜய் கட்சி ஆரம்பித்த பின் பிரச்சாரத்திற்காக விஜய் வெளியிட்ட 'உங்க விஜய் நான் வரேன்" வீடியோவில் விருகம்பாக்கம் முதலில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications