Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்றும் தங்கள் பிரச்சாரத்தை முடக்கவே திமுக செயல்பட்டு வருவதாக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக்கூடாது எனத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொள்வதாகவும் உரியப் பாதுகாப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இன்றைய தினம் பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று 4 இடங்களில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், சில காரணங்களால் இரு இடங்களில் அவரது பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே மாலை செய்தியாளர்களிடம் பேசிய தவெக ஆதவ் அர்ஜுனா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Vijay Campaign issue

விஜய்

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் தங்கள் பிரச்சாரத்தை முடக்குவதே திமுக திட்டம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், போலீசார் இப்போதும் முதல்வர் பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அவர், இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது எனத் தேர்தல் அதிகாரியிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றும் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஒரு காவலர் கூட பாதுகாப்புப் பணியில் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரச்சாரம்

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ஆளும் கட்சியின் அழுத்தத்தைத் தாண்டி விஜய் செயலாற்றி வருகிறார். தவெக வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் இன்று 4 இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். முதலில் பெரம்பூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். அங்கு போலீசார் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தனர். தேவையான இடத்தில் தடுப்புகளை அமைத்து, மக்கள் கூட்டம் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொண்டனர். அதற்காக பெரம்பூர் போலீசாருக்கு நன்றி.

ஆனால், பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் உரியப் பாதுகாப்பு இல்லை. எந்த வழியாகச் செல்வோம், எங்குப் பேசுவோம் என அனைத்து தகவல்களையும் போலீசாருக்கு கொடுத்திருந்தோம். எங்கள் தொண்டர்கள் உரிய ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

கரூர் சம்பவம்

கரூரில் எப்படி செந்தில் பாலாஜி மனிதர்களால் உருவாக்கப்பட்ட கூட்ட நெரிசலை உருவாக்கினாரோ அதேபோல ஒரு விஷயத்தை இன்றும் முயன்றுள்ளனர். கரூர் சம்பவத்தால் மக்கள் கோபம் செந்தில் பாலாஜி மீது இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் தொகுதி மாறி போட்டியிடுகிறார். கரூர் என்றால் நான் தான் எனச் சொல்லிக் கொண்டு இருந்தவருக்குத் தனது சொந்த தொகுதியிலேயே போட்டியிடத் திராணி இல்லை. பிறந்த மண்ணை விட்டு கோவைக்கு ஓடியிருக்கிறார். ஏனென்றால் அவர் தான் கரூர் சம்பவத்தின் முதல் குற்றவாளி!

காபந்து முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியில் யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இதுபோல செய்கிறார். இத்தனை காலமாக அங்கு அவரை எதிர்க்க யாரும் இல்லாததாலேயே அவரால் வெல்ல முடிந்தது. இன்றைய தினம் தவெக வேட்பாளருக்காகக் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்யச் சென்றார். இருப்பினும், அங்கு எந்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு இல்லை.

பாதுகாப்பு இல்லை

பெரம்பூர் போலீசார் உரிய பாதுகாப்பைக் கொடுத்த போதிலும், கொளத்தூரில் எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொண்டர்கள் உள்ளனர். ஆனால், தன்னெழுச்சியாக கூடும் மக்கள் கூட்டத்திற்குப் பாதுகாப்பு இல்லை. நாங்கள் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனச் சொல்லிய பிறகும் குழந்தைகள் வருகிறார்கள். ஆனால், கொளத்தூரில் போலீசார் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போலீஸ் உயர் அதிகாரிகள் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல், இன்னும் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். எங்கள் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், விஜய் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு தருவதில்லை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+