மீண்டும் மீண்டுமா? புதுச்சேரியை விடாத விஜய்! இறங்கி வந்துட்டாறே! தமிழகத்தில் அடுத்த மீட்டிங் எங்கே?
சென்னை: புதுச்சேரியில் விஜயின் சாலை வலத்துக்கு (ரூட் ஷோ) அனுமதி கிடைக்காததால் நாளைய அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் மீண்டும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தவெக தரப்பு சந்தித்தும் அனுமதி கிடைக்காத நிலையில், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தை தொடர்ந்து, தமிழகத்தில் விஜய் எங்கு மக்கள் சந்திப்பை நடத்தப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய தகவல் படி இரண்டு இடங்களி மக்கள் சந்திப்பு நடத்துவதற்கான முன்னற்படுகளை தமிழக வெற்றி கழகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அப்படி தமிழக அரசியலுக்கு சினிமாவில் இருந்து புது வரவாக வந்திருப்பவர் நடிகர் விஜய்.
தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய போதே விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. சில ஆண்டுகளில் கட்சியில் கட்டமைப்பை முன்கூட்டியே வலுப்படுத்திவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே ஆரம்பித்த நிலையில், அக்டோபரில் தான் மாநாடு நடத்த முடிந்தது.

தவெக விஜய்
இந்த ஆண்டு ஒரு மாநில மாநாடு நடைபெற்றது. இப்படி தொடக்கம் பிரம்மாண்டமாக அமைந்தாலும், விஜயின் அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மக்களை சந்திப்பதில்லை, ட்விட்டர் அரசியல்வாதி போன்ற விமர்சனங்கள் விஜய் மீது முன்வைக்கப்பட்டது. அதை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டார். திருச்சியில் தொடங்கிய அவரது பயணம், நாகை, திருவாரூர் என தொடர்ந்து நடந்து வந்தது.
கரூர் சம்பவம்
கடைசியாக செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரம் விஜயின் அரசியல் பயணத்துக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது. விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி ரோட்ஷோ
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வெளியே வராத விஜய் சிபிஐ விசாரணைக்கு பிறகு தான் வெளியே வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா என தனது அரசியல் கட்சியை கொண்டு செல்ல திட்டமிட்ட விஜய் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காரணம் காட்டி அவரது சாலை வலத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் அடுத்தடுத்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.
விஜய் அரசியல் பயணம்
தற்போது தற்போது வரை அனுமதி கிடைக்காத நிலையில் விஜயின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ரோட் ஷோவுக்கு பதில், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டு பகுதிகளில் அடுத்தடுத்து விஜய் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு பகுதிகளுமே அதிமுகவுக்கு தொடர்புடையதுதான். ஒன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம். இன்னொன்று அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கும் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோடு.
கோபி பொதுக்கூட்டம்
செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவர்கள் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டினார் எடப்பாடி. இப்போது வந்திருக்கும் கூட்டத்தை பாருங்கள்.. கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என பேசி இருந்தார் எடப்பாடி. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சொந்த ஊரில் விஜயை வைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதுதான் செங்கோட்டையில் எண்ணம். அதற்காக கோபிசெட்டிபாளையத்தில் மிகப்பெரிய விஜயின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பை நடத்துவதற்கான முன்னற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications