பிரச்சாரத்தில் தவெக கூட்டணி தலைவர்கள்.. பொதுக்கூட்டத்திற்கு விஜய் வர மாட்டாராம்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெக கூட்டணி சார்பாக நடத்தப்படும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க மாட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு இந்த 2 தொகுதிகளில் வென்ற போதும், 10 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

Vijay

அதேபோல் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி அறிவிக்கப்பட்டது. தவெக தலைமையிலான இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள சூழலில், தவெக கூட்டணி கட்சிகளும் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளன.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வரும் அக்டோபர் 1ம் தேதி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்கள் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன் மற்றும் வைகோ ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

ஆனால் தவெக கூட்டணியின் தலைவர் விஜய் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தவெக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையை பகிர விஜய் விரும்பவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமே தனித்து பிரச்சார மேடையில் தோன்ற இருக்கின்றனர்.

இதனால் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விஜய் மேடையேற விரும்பாததற்கு வன்னியர் சமூக வாக்குகள் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் பாமகவை கூட்டணியில் கொண்டு வரும் நோக்கில் தவெக செயல்பட்டு வருவதால், திருமாவளவனுடன் ஒரே மேடையை பகிர விஜய் விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+