Vijay Dance: கணீர் குரலில் வேல்முருகன் பாட! விஜய் ஆட! அரங்கம் அதிர! பனையூரில் "தளபதி கச்சேரி"
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த நிகழ்வில் பாடகர் வேல்முருகன் பாட, விஜய் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இதனால் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த விழாவில் விஜய் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்த கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இந்த விழாவில் பாடகர் வேல்முருகனின் இசை கச்சேரி நடந்தது. "தளபதி தளபதி வாழ்க
நம்ம வெற்றிக் கொடி எப்பொழுதும் வாழ்க.." என்ற பாடலை அவர் பாடிய போது திடீரென விஜய் நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
வீட்டுக்கு வீடு விஜய்
இந்த விழாவில் இருந்த பேனரில்
வீட்டுக்கு வீடு விஜய்!
தமிழ்நாட்டுக்கு விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் வாழி! என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வேல்முருகன், விஜய் காலில் விழுந்தார். அப்போது விஜய் உடனே அவரை தூக்கி கட்டி அணைத்து, வேல்முருகன் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தார். பின்னர் அறுபடை முருகனின் படத்தை பரிசாக வேல்முருகன், விஜய்க்கு கொடுத்தார்.
1977 ஆம் ஆண்டு நடந்தது என்ன?
இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரேடியோவில் பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில், அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என கண்ணீர் விட்டார்.
காமராஜர், அண்ணா
அது போல் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இந்த தமிழகத்தை காக்க இந்த தமிழக வெற்றிக் கழகத்தால்தான் முடியும்.
திருக்குறள்
திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுகவுக்கு ஒரு குறள் சொல்லியிருந்தால் எப்படியிருக்கும் தெரியுமா?
"அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு"
என்ற கற்பனை குறளை விஜய் தெரிவித்ததும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என கேள்வி கேட்கிறது.
அரசியல் நெருக்கடி
எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா என்றும் கொந்தளித்தனர். இன்று நம்மை பார்த்து கொந்தளிக்கிறார்கள். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாகும் கொந்தளிப்பதே திமுகவின் வேலையாக உள்ளது.
டெக்னாலஜி வளர்ந்திருக்கு..
இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது. அதனால் டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் உருட்டிய தகர டப்பா
அதைவிட்டுவிட்டு 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். "பவள விழா பாப்பாவுக்கு" வேற என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.
விமர்சனம்
ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம் என்றார்.
தளபதி கச்சேரி
கடந்த ஆண்டு இறுதியில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. அப்போது விஜய், ஜனநாயகன் படத்தில் இருந்து "தளபதி கச்சேரி.." பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை வைப் செய்தார். அந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வைரலாக்கினர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications