சீட்டுக்களை கலைத்துப் போட்ட விஜய்.. ஒட்டுமொத்தமாய்டிரான்ஸ்ஃபரான அதிகாரிகள்! அதிரடியாக வெளியான ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழக அரசு அமைந்ததிலிருந்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதோடு புதிய பணியிட நியமனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொது (சிறப்பு.அ) துறை, அரசாணை (Rt.) எண்.2732, நாள் 28.07.2026 மூலம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தொடர்பான விரிவான இடமாற்றங்கள், பணியிட நியமனங்கள் மற்றும் சேவை ஒப்படைப்பு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி,எல். மைதிலி,ஆர். பாலசுப்பிரமணியன், எஸ். வெங்கடேஷ்,சி. அஜய் சீனிவாசன், கே. காயத்ரி சுப்ரமணி, டி. அழகர்சாமி, எஸ். வள்ளி, எம்.ஆர். கண்ணகி, பி. முருகேசன் மற்றும் பி. குமாரேஸ்வரன் உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Vijay tn Government District Revenue Officer

மேலும், டாக்டர் பி.எம். செந்தில்குமார், வி. லதா, ஜி. சிவருத்ராயா, கே. ராமமூர்த்தி மற்றும் ஏ. சிவகாமி ஆகியோரின் சேவைகள் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முந்தைய உத்தரவுகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்

15.06.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் டாக்டர் பி. முருகேசன் தொடர்பான பணியிட நியமன ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 09.07.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் எஸ். வள்ளி மற்றும் பி. குமாரேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்ற உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இடமாற்றங்கள் - நியமனங்கள்

எல். மைதிலி - தமிழ்நாடு அரசுத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் (நிர்வாகம் & தகவல் நிர்வாகம்) பதவியில் இருந்து, சென்னை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநர் (சமூக ஊடகம்) ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர். பாலசுப்பிரமணியன் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பதவியில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டிருந்த ஜெ. நாராயணனுக்குப் பதிலாக பொறுப்பேற்கிறார்.

எஸ். வெங்கடேஷ் - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியத்தின் செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பதவியில் இருந்து மின்-ஆளுமை இயக்குநரகத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி. அஜய் சீனிவாசன் - மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த இவர், சென்னை பயிற்சி தலைமை இயக்குநர் அலுவலகத்தின் ஏ & பி அறக்கட்டளைப் பயிற்சி பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே. காயத்ரி சுப்ரமணி - அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் நிர்வாக அலுவலர் பதவியில் இருந்து மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகத்தின் இணை ஆணையராக மாற்றப்பட்டு காலிப்பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி. அழகர்சாமி - நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணை ஆணையர் பதவியில் இருந்து நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், கடலூரின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். வள்ளி - ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஆர். கண்ணகி - பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்மா விடுதியில் இருந்து விடுப்பிலிருந்து திரும்பி, மனிதவள மேலாண்மைத் துறையில் ஆய்வாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் பி. முருகேசன் - கோயம்புத்தூர் கலால் துணை ஆணையர் பதவியில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜன்மம் நிலங்களின் தீர்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி. குமாரேஸ்வரன் - சேலம் ஆவின் பொது மேலாளர் பதவியில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைகள் ஒப்படைப்பு

டாக்டர் பி.எம். செந்தில்குமார் அவர்களின் சேவைகள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் இருந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலராக நியமிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வி. லதா அவர்களின் சேவைகள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் (நிர்வாகம்) பதவிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜி. சிவருத்ராயா அவர்களின் சேவைகள், தமிழ்நாடு இடர் குறைப்பு முகமையின் இணை இயக்குநராக நியமிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளன.

கே. ராமமூர்த்தி அவர்களின் சேவைகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியத்தின் செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலராக நியமிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஏ. சிவகாமி அவர்களின் சேவைகள், திருநெல்வேலி மருக்களுகறிச்சி திட்டத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) பதவிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெளிப்பணிக்கான உத்தரவுகள்

டாக்டர் பி.எம். செந்தில்குமார், வி. லதா, திரு ஜி. சிவருத்ராயா, கே. ராமமூர்த்தி மற்றும் ஏ. சிவகாமி ஆகியோரின் வெளிப்பணிக்கான நியமன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தனி உத்தரவுகள் சம்பந்தப்பட்ட செயலக நிர்வாகத் துறைகளால் பின்னர் வெளியிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் ஆளுநரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரால் வெளியிடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+