Vijay: மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி கடன்.. விஜய்க்கு புதிய சிக்கல்? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: விஜய் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக ஏற்கனவே ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கப்பட்டதாக கூறியிருப்பதன் உண்மைத்தன்மை, நோக்கம் மற்றும் தன்மை குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன. எனவே அதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். விஜய் தனது வேட்பு மனுவில் தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் மற்றும் மனைவியிடம் உள்ள சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை வேட்பு மனுவுடன் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்து இருந்தார்.

மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன
விஜய் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மேலும் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:- பெரம்பூர் தொகுதி வாக்காளாராக அங்கு போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை தனக்கு உள்ளது. வேட்பாளர்கள் உண்மையான தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
சங்கீதாவுக்கு கடன்
வேட்பாளர்கள் Form 26-ல் வழங்க வேண்டிய தகவல்கள் முக்கியமான அரசியல் சட்டப் பொறுப்பாகும். முக்கிய விவரங்களை மறைத்தல், ஒளித்தல், தவறாக குறிப்பிடுதல் அல்லது மாற்றம் செய்தல் ஆகியவை தேர்தல் நடைமுறையில் மோசடியான செயலாக கருதப்படும். விஜய் தன்னை நேர்மையானவராகவும், வெளிப்படையானவராகவும் காட்டிக்கொள்கிறார்.
ஆனால், விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமான நிறுவனங்களுடன் பெரும் தொகை கடனாக வழங்கியுள்ளதாக தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார். இது பொதுமக்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கப்பட்டதாக கூறியிருப்பது, சமீபத்திய பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாளை விசாரணைக்கு வருகிறது
இதனால் இத்தகைய பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மை, நோக்கம் மற்றும் தன்மை குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்க்கு எதிரான வழக்கு போன்ற கோரிக்கையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுக்களின் மீதும் நாளை விசாரணை நடைபெறுகிறது.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications