அதிமுகவில் 10 பேர்தான் இருக்காங்க.. உண்மையான அதிமுக விஜய்யிடம் இருக்கு.. ஆதவ் அர்ஜுனா ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருப்பதே வெறும் 10 பேர் தான் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருக்கும் 10 பேரும் டெல்லி பக்கம் போய்விட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியளவில் கூட்டம் வரவில்லை என்றாலும், தவெகவினர் மக்களை நாடி தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

Vijay

அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுக கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்க திட்டமிட்டு வருகிறது. விஜய் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. விஜய் தொழிலை விட்டுவிட்டு அரசியல் களம் வந்துள்ளார்.

எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய மாட்டேன் என்று கூறியுள்ளார். கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட வலியால் தான் வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கினார். சென்னையில் இருந்து வேலூர் வரை விஜய்யை பார்க்க லட்சம் பேர் நிற்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பின் விஜய்யை பார்த்துதான் திமுக அச்சப்படுகிறது. திமுகவின் நோக்கமே தவெகவை முடக்குவது தான்.

சினிமாவில் 18 மணி நேரம் உழைக்கும் விஜய், அரசியலில் 24 மணி நேரமும் உழைக்க தயாராக உள்ளார். ஆனால் விஜய் மீது அவதூறு பரப்புகிறார்கள். அதேபோல் ஒட்டுமொத்த அதிமுகவும் தவெகவுக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிமுகவில் இருப்பதே 10 பேர்தான். அவர்களும் டெல்லி பக்கம் போய்விட்டார்கள். உண்மையான அதிமுக இங்கு உள்ளது.

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், விஎஸ் பாபு, தனபால் மகன் லோகேஷ் உள்ளிட்டோர் தவெக பக்கம் வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக என்று எடப்பாடி பழனிசாமி பேசி வரும் சூழலில், அதிமுகவில் இருப்பதே வெறும் 10 பேர் என்று ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+