பாஜகவை பந்தாடிய விஜய்! 27ல் 26 தொகுதிகளில் கடும் பின்னடைவு! படுதோல்வியை நோக்கி ஸ்டார் வேட்பாளர்கள்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் களம் முற்றிலும் வேறு திசைக்கு திரும்பி விட்டது. தற்போதைய நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பது அரசியல் அரங்கில் பெரிய அதிர்வை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த தேர்தலில் முக்கியமாக பேசப்படும் விஷயம், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் பரிதாபகரமான நிலை தான்.
தமிழகத்தில் இந்த முறை பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து 27 தொகுதிகளில் போட்டியிட்டது. தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் என இந்துகள் வாக்கு வங்கியை குறிவைத்து பல முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது. ஆனால், ஊட்டியை தவிர பெரும்பாலான் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருக்கின்றனர்.

இந்த தேர்தலை பாஜக முக்கியமான சோதனையாகவே கருதியிருந்தது. ஆனால், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் அந்தக் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பாஜக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினர்.
பல தொகுதிகளில் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களே எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பெறாதது பாஜக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கொங்கு பகுதிகளில் பாஜக பலம் கொண்டதாக கருதப்பட்ட பகுதிகளிலும் பின்னடைவு நிலவி வருகிறது. இதனால், கூட்டணியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பாஜக வாக்கு வங்கி இன்னும் வலுவாக இல்லை என்ற விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது.
மேலும், தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்பதையும் இந்த நிலவரம் வெளிப்படுத்துகிறது. இந்த தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவிய நிலையில், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியும் பல்வேறு கட்சிகளின் வாக்குகளைப் பாதித்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் தாக்கம் பாஜக வேட்பாளர்களின் வாக்கு வங்கியிலும் பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதால் இறுதி முடிவுகள் வெளிவரும் வரை எந்த முடிவையும் உறுதியாகக் கூற முடியாது. சில தொகுதிகளில் நிலைமைகள் மாறும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் தற்போதைய நிலவரம் பாஜகவுக்கு சவாலான சூழல் உருவாகியுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக தரப்பில் ஆவடி தொகுதியில் நரசிம்மம் மகேந்திரா, மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன், மொடாகுறிச்சியில் சிவக்குமார், அவிநாசியில் எல் முருகன் ,கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம், திருப்பத்தூரில் திருமாறன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோட்டில் விஜயதாரணி உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைவருமே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊட்டியில் மட்டும் பாஜக வெற்றியை நோக்கி சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications