உள்ள வாங்க.. இங்கே ஏன் நிற்கிறீங்க.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு டோஸ் விட்ட புஸ்சி ஆனந்த்
சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு அழைத்து இருந்தார். இதற்காக இயக்க நிர்வாகிகள் மாநிலம் முழுவதிலும் இருந்து பனையூரில் குவிந்தனர். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே கூடியிருந்தவர்களிடம் புஸ்சி ஆனந்த் கடிந்து கொண்டார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். சமீப காலமாக விஜயின் செயல்பாடுகள் அவரது அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த மாதம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு கல்வி ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,500 மாணவர்களையும் தனித்தனியே சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் களைப்படைந்த போதிலும் முகத்தில் அதை காட்டிக்கொள்ளாமல் விஜய் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய விஜய், படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து எடுக்க முடியாது என்ற அசுரன் பட டயலாக்கை பேசினார்.
மேலும், படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை. இளம் தலைமுறையினர் முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நம்ம விரல வச்சு நம்ம கண்ணையே குத்துறதை கேள்வி பட்டதுண்டா? அதுதான் இப்போது நடந்துட்டு இருக்கு.. அதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க... என்று சொல்லி பாருங்கள். சும்மா... முயற்சி பண்ணி பாருங்க... நீங்கள் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும். ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்" என்று பேசினார். விஜய் மாவட்டத்திற்கு சிறந்த மாணவ மாணவிகள் என தேர்வு செய்யாமல் தொகுதிக்கு மூன்று மாணவ மாணவிகளை தேர்வு செய்ததிலே அவரது அரசியல் நகர்வு தென்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசபப்ட்டது.
அதுபோக, மாணவ மாணவிகள் முன்னிலையில் வாக்குக்கு காசு வாங்க வேண்டாம் என அரசியல் நெடி கலந்தே அவர் பேசியது விஜயின் அடுத்த மூவ் எதை நோக்கி இருக்கப் போகிறது எனபதையே காட்டுவதாக இருந்தாக பரபரப்பாக பேசப்படது. இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடைபெறும் என்று 234 தொகுதிகளை சேர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் அழைப்பு போனது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று காலை பனையூரில் குவிந்தனர். விஜய் மன்ற நிர்வாகிகள் வருகையால் இன்று பனையூர் பகுதி முழுவதும் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. விஜய் மதியத்திற்கு பிறகே வருகை தந்து தனது இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக இன்று காலை கூட்டம் நடைபெறும் மக்கள் மன்ற அலுவலகத்திற்கு வெளியே நின்று பேசிகொண்டு இருந்த நிர்வாகிகளை புஸ்சி ஆனந்த் கடுமையாக கடிந்து கொண்டார். வெளியே கூட்டமாக நின்று பேசியவர்களை கூப்பிட்ட புஸ்சி ஆனந்த்.. அங்கே ஏன் நிற்குறீங்க.. உள்ளே வருவதாக இருந்தால் என செம டென்ஷனாக பேசினார். பின்னர் உள்ளே சென்று நிர்வாகிகள் சிலரையும் கடிந்து கொள்வது போல புஸ்சி ஆனந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications