கப்பு முக்கியம் பிகிலுனு சொன்ன விஜய்.. கப்புன்னு பிடிச்சிகிட்ட ரசிகர்கள்.. அடுத்தடுத்து வெற்றி
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் சாதித்து காட்டினர். அதே போல் இந்த நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அதற்கேற்ப இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை நகராட்சி
புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் பரமேஸ் வெற்றி பெற்றுள்ளார். அது போல் வாலாஜா நகராட்சியில் 3ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையம் நகராட்சியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் வேல்முருகன் வெற்றி வெற்றுள்ளார். அது போல் பொன்னேரி நகராட்சியில் 6ஆவது வார்டில் மணிமாலா சிலம்பரசன், விருதுநகர் மாவட்டம் தெற்கு கோடிகுளம் நகராட்சியில் 5ஆவது வார்டில் ராஜசேகரன் வெற்றி பெற்றதாக தெரிகிறது. அது போல் அனுமந்தன்பட்டி நகராட்சி, தேனி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டைகுப்பத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை விஜய் ரசிகர்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான ஏழை எளிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கி வருகிறார்கள். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை தொடங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

கப்பு முக்கியம்
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். மழை, வெள்ளப் பாதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தனர். அதன் பலனைத்தான் தற்போது கைமேல் பார்க்கிறார்கள். அடுத்தது விஜய்யுடன் போட்டோஷூட்டுக்கு எத்தனை பேர் "வெற்றிக் கோப்பையுடன்" செல்ல போகிறார்களோ! கப்பு முக்கியம் பிகிலுனு சும்மாவா சொன்னார் விஜய்! அப்படியே கப்புனு பிடிச்சிக்கிட்ட ரசிகர்கள்!
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications