விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக?
சென்னை: நான்கு முனை போட்டியை எதிர்நோக்கியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுகவும் சம பலத்துடன் போராடி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ள பாஜக தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும் என ஒரு முறை சொன்னால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பலமுறை கூறி வருகிறார்கள்.
அடக்கி வாசித்த பாஜக
அதாவது மறைமுகமாக அதிமுக ஜெயித்தாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை அவ்வப்போது அதிமுக தலைமைக்கு உணர்த்திக் கொண்டே வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் கையில் எடுக்கப்பட்ட நிலையில் கூட்டணி ஆட்சி என்கிற கூக்குரலை பாஜக கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கிறது.

என்டிஏ கூட்டணி ஆட்சி
ஆனால் இப்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மத்திய அமைச்சர் ஒருவர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதிலும் முக்கியமாக மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் விஜயோடு கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசி இருப்பது பலரையும் புருவம் உயர்த்த உள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
ராம்தாஸ் அத்வாலே பேசியது என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரிக்கு வருகை தந்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு நடிகர் விஜய் போட்டியிடுகிறார்.
வாய்ப்பை நழுவவிடாத பாஜக
தேர்தலுக்குப் பிறகு அங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசி உள்ளது தான் தற்போது பரபரப்பு ஹாட் டாபிக்காக உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமையென அதிமுக கூறி வந்தாலும், தமிழகத்தில் அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி ஆட்சி தான் அமையும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜக ஸ்ட்ராங்காக பதிவு செய்து வருகிறது.
பல்ஸ் பார்க்கிறதா பாஜக மேலிடம்?
இதற்கு அதிமுகவின் மேல்மட்ட மற்றும் இரண்டாம் மட்ட ஏன் தொண்டர்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்ததால் பாஜக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. ஆனால் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் அணித்தரமாக அதிமுக தலைமைக்கு உணர்த்துவதற்காக தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் தங்கள் தோழமைக் கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரான ராம்தாஸ் அத்வாலேவை வைத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்பதை அதிமுகவிற்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக பாஜக நினைவூட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை அதிமுக தலைமை எப்படி எதிர்க்கும் அல்லது ஏற்கும் என்பது தான் தெரியவில்லை!
- சிறப்பு நிருபர்
-
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்?












Click it and Unblock the Notifications