பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் இப்போது தேவை தானா? பூவுலகின் நண்பர்கள் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான தவெக அரசின் திட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றி செல்வன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். புதிய தலைமைச் செயலகத்தின் அவசியம் என்ன, கடலோர பகுதியில் பிரம்மாண்ட கட்டடம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்.. அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது குறித்தும் ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தான், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் விஜய் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

Vijay Pattinapakkam Secretariat Plan

புதிய தலைமை செயலகம்

புதிய தலைமை செயலகம் என்பதை பலரும் வரவேற்றாலும் கூட பட்டினப்பாக்கத்தில் அமைவது தொடர்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றி செல்வன் நமது ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர், "ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் பல நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டடங்களே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது சென்னைக்கு மட்டும் புதிய தலைமைச் செயலகம் ஏன் தேவைப்படுகிறது? தற்போதைய கட்டடத்தில் இடநெருக்கடி இருப்பதாக கருதினால், அதை சீரமைப்பது அல்லது நிர்வாகப் பணிகளை வெவ்வேறு பகுதிகளுக்கு பரவலாக்குவது போன்ற மாற்று வழிகள் உள்ளன. அதை அரசு பரிசீலிக்கலாம்.

மீனவர்கள்

குறிப்பாக கிண்டி, கோயம்பேடு போன்ற பகுதிகளுக்கு சில நிர்வாக பணிகளை மாற்றலாம். ஏன் பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்டமான புதிய கட்டடத்தை அமைக்க வேண்டும். பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் நீண்ட காலமாக தொடர்புடையது. வரலாற்று ரீதியாகவே இது மீனவர்களின் ஊராக உருவானது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக சென்னை மீனவர்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து வருகிறார்கள். தற்போது அப்பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்புகளை காலி செய்யக் கோருவது, அவர்களின் வாழ்வாதாரத்தையே பறிக்கும் நடவடிக்கையாக அமையும்.

வாழ்விடங்கள்

மீனவர்களின் வாழ்விடங்களை அகற்றிவிட்டு மேற்கொள்ளப்படும் திட்டத்தை வெறும் வளர்ச்சித் திட்டமாக பார்க்கக் கூடாது . இது பூர்வகுடி மக்களின் வாழ்வியலின் மீது தொடுக்கப்படும் வரலாற்று ரீதியான வன்முறை ஆகும். கடலோடு இணைந்த வாழ்க்கை முறையை கொண்ட மீனவர்களுக்கு, கடற்கரை அருகே மீன்பிடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமல்லாமல், வலைகளை உலர்த்தவும், பிடிக்கப்பட்ட மீன்களை வைக்கவும் தேவையான இடங்களும் அவசியம். எனவே, அவர்களின் குடியிருப்புகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது அவர்களை பாதிக்கும்.

கைவிட வேண்டும்

இது மட்டுமில்லை பட்டினப்பாக்கம் அமைந்துள்ள சென்னை கடலோர பகுதி இயற்கை சீற்றங்களின் அபாயம் கொண்ட பகுதி. கடல் அரிப்பு மற்றும் சுனாமி போன்ற அபாயங்கள் உள்ள நிலையில், கடற்கரைக்கு மிக அருகில் உயரமான கட்டடங்களை அமைப்பது குறித்தும் நாம் பார்க்க வேண்டும். இத்தகைய கட்டுமானங்கள் CRZ விதிமுறைகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

இதனால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு ரத்து செய்ததைப் போல, பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலக திட்டத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெற்றிச் செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+