விஜய்யின் "நிழல் அமைச்சரவை".. ஸ்டாலின் நம்பிய அந்த ஐஏஎஸ்கள்.. இரவோடு இரவாக விஜயிடம் போயிட்டாங்களே
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 59 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய். தமிழகத்தின் முதலமைச்சராக அவர் பதவியேற்க திட்டமிட்டு வரும் நிலையில், அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 108 இடங்கள்
திமுக (DMK): 59 இடங்கள்
அதிமுக (AIADMK): 47 இடங்கள்
மெஜாரிட்டிக்குத் தேவையான 118 இடங்களை அடைய 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி (INC) தனது ஆதரவை விஜய்க்கு அளித்துள்ளது. இதன் மூலம் விஜய்க்கு 112 இடங்கள் கிடைத்துள்ளது.. ஏனென்றால் 1 இடத்தில் விஜய் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய 5 அதிகாரிகள்: விஜய்யின் கரங்களை வலுப்படுத்துவது யார்?
கடந்த 5 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் மிக முக்கியமான கொள்கை முடிவுகளை எடுத்தவர்கள் 5 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ஸ்டாலின் அவர்கள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கையே அவரது ஆட்சியின் பலமாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் மாற்றத்தில் ஒரு சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பே, இந்த 5 அதிகாரிகளில் இருவரைத் தவிர, மற்ற மூவரும் விஜய்க்குத் திரைமறைவில் ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. இதில் ஒரு பெண் அதிகாரி விஜய் பக்கம் செல்லவில்லை.
நிர்வாகக் கட்டமைப்பு: ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே அரசு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது, நிலுவையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் எவை என்பது குறித்து இந்த அதிகாரிகள் விஜய்க்கு விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.
வழிகாட்டுதல்: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த இவர்கள், தற்போது விஜய்யின் "நிழல் அமைச்சரவை" போலச் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் அனுபவம் விஜய்யின் முதல் 100 நாள் திட்டங்களைச் செயல்படுத்தப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பதவியேற்பு விழா
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாகப் பதவியேற்பு விழா நடைபெற இருந்தது. ஆனால் அது ரத்தாகிவிட்டது. கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்த விஜய், தனது தரப்பில் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்தார். இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம். தற்போதைய நிலையில் விஜய் தரப்பிடம் 6 இடங்கள் குறைவாக இருப்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பலம் 107 ஆக உள்ளது. இதற்குக் காரணம், அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதே ஆகும். சட்டப்படி அவர் ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு மற்றொன்றைத் துறக்க வேண்டிய சூழலில், தற்போதைய பலம் 107 ஆகக் கணக்கிடப்படுகிறது. இதற்கிடையில், போதிய பலம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதோடு ஆளுநர் 118 எம்எல்ஏக்கள் ஆதரவை கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனையும் செய்தும் வருகிறார்.












Click it and Unblock the Notifications