பவன் கல்யாண் அளவிற்கு இல்லையே.. விரக்தியின் உச்சத்திற்கே போன தவெக விஜய்.. அப்படி என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் பெரிய ஆரவாரத்தோடு நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இதுவரை பெரிய "சம்பவம்" எதையும் செய்யவில்லை. அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கடுமையான வலிமையான எதையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் விரக்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன.

ஆந்திர பிரதேச அரசியலில் பவன் கல்யாண் செய்த போராட்டம் ஒன்று அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது. கடந்த 2023ம் ஆண்டு நந்தியாலா பகுதியில் அதிகாலை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை ஆதரிப்பதற்காக பவன் கல்யாண் விஜயவாடா நோக்கிச் சென்று போராட்டம் செய்தார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்தபோது, அவரது வாகன அணிவகுப்பு இரண்டு முறை தடுக்கப்பட்டது. ஜீப் மீது அமர்ந்தபடி இவர் வேகமாக சென்ற பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அதன்பின் இவரின் ராலி தடுக்கப்பட்டது.

Tamilaga Vetri Kazhagam vijay

பவன் கல்யாண் - விஜய் அரசியல்

இதனால் கல்யாண் தனது வாகனத்திலிருந்து இறங்கி விஜயவாடாவில் உள்ள மங்களகிரி நோக்கி நடந்து செல்ல வேண்டியதாயிற்று. விஜயவாடாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால், கல்யாண் அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார். அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மாநில அரசையும், போலீசாரையும் எதிர்த்து அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றதோடு.. அவரின் அரசியலை புரட்டி போட்டது. அதோடு சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் கூட்டணிக்கும், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக அமைந்தது.

விஜய் விரக்தி

அங்கே அரசியலை மாற்றிய சம்பவமாக இது பார்க்கப்பட்டது. அதேபோன்ற அரசியலை விஜய் செய்வார்.. ஆளும் திமுக, பாஜக கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

1. ஆனால் தமிழக அரசியலில் பெரிய ஆரவாரத்தோடு நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இதுவரை பெரிய "சம்பவம்" எதையும் செய்யவில்லை. அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கடுமையான வலிமையான எதையும் எடுக்கவில்லை.

2. விஜய் பெரிதாக போராட்டம் எதையும் மேற்கொள்ளவில்லை. களத்தில் நேரடியாக சென்று கடுமையான போராட்டங்களை மேற்கொள்ளவில்லை.

3. அஜித் குமார் காவல் கஸ்டடி மரணத்தில் மட்டும் விஜய் போராட்டம் செய்தார். ஆனால் அதுவும் கூட 15 நிமிடம் மட்டுமே நடந்த போராட்டம் ஆகும்.

4. அந்த போராட்டம் பெரிய அழுத்தங்களை சந்திக்கவில்லை. பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

5. ஒருமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி களத்தில் மக்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் ஓரணியில் இணைவோம், உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களின் மூலம் மக்களை சென்று சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

6. ஆனால் அரசியலில் இன்னும் முழுமையாக கால் பதிக்காத விஜய்.. இதுவரை மக்களை சென்று பார்க்கவில்லை. விஜய் நடத்துவதாக இருந்த பேரணியும், நடைபயணமும் கூட இப்போது வரை தொடங்கவில்லை.

விரக்தியின் உச்சம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. விசிக, பாமக இதுவரை விஜய் பக்கம் வர தயாராக இல்லை. காங்கிரசுக்கு அவர் அழைத்த தூதுக்களும் கூட தோல்வியில் முடிந்துவிட்டன. காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி வைக்க ரெடியாகி இருப்பது போல தோன்றவில்லை.

இப்படி தொடர் சரிவுகளில்.. சூழ்நிலை பவன் கல்யாண் அளவிற்கு இல்லையே.. அவர் அளவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியுமா என்று விஜய் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+