இந்த ஆண்டு நோ தீபாவளி.. விஜய்யின் முடிவால் சோகம்! அடுத்தக்கட்ட நகர்வில் தவெக தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு நாள் முன்னாடியே வாழ்த்து சொன்ன விஜய், இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்தை தவிர்த்திருக்கிறார். நிர்வாகிகள் தீபாவளியை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் குவிந்த நிலையில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Vijay Diwali TVK

இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மறுபுறம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த சம்பவம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 41 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புல் கூட முளைத்துவிட்டது. ஆனால் இன்னமும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கிடையில், விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு ஆயுதபூஜை போடப்பட்டிருந்ததும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

இதனால் தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்தை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே வாழ்த்தை தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு, தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த முடிவு காரணமாக கட்சியின் நிர்வாகிகள் அப்செட் ஆகியுள்ளனர். இருப்பினும் 41 பேர் பலியாகியுள்ள நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தை தவிர்ப்பதே சரி என்று கொண்டாட்டத்தை தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

அதேபோல மறுபுறம் தீபாவளி முடிந்த பின்னர், 41 குடும்பங்களையும் சந்திக்க விஜய் கரூர் செல்ல இருக்கிறார். இதற்கான திட்டமிடலில் கட்சி தீவிரமாக இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு கட்சி தலைமைகள் பக்குவமடைந்துள்ளன. ஒவ்வொரு விஷயத்தையும் கட்சி கவனமாக அணுக தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கரூர் போவதற்கு அனுமதி கேட்கும் விஷயத்திலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மீது எழுந்த முக்கிய குற்றச்சாட்டு இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை என்பதுதான். இதை சரி செய்யும் பணியில் கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவது, அவர்களை கொண்டு கட்சியை கீழ் மட்டத்திலிருந்து கட்டியெழுப்புவது என்று தவெக சீரியஸாக இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+